LATEST NEWS
“எர்லிங் ஹாலாண்ட் கமெண்ட் பண்ணினா… 20 கிலோ எடையைக் குறைப்பேன்..!” இணையத்தைக் கலக்கும் வைரல் வீடியோ..!!
மும்பையைச் சேர்ந்த சாஹில் குப்தா என்ற இன்ஸ்டாகிராம் பதிவர், பிரபல கால்பந்து நட்சத்திரம் எர்லிங் ஹாலாண்டின் நிஜ அளவிலான உருவப் பலகையுடன் ஒரு வீடியோவைப் பகிர்ந்திருந்தார். அதில், “இந்த வீடியோவில் எர்லிங் ஹாலாண்ட் கமெண்ட் செய்தால், அடுத்த 3 மாதங்களில் நான் 20 கிலோ எடையைக் குறைப்பேன்” என்று ஒரு சவாலை விடுத்திருந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி பலரின் கவனத்தையும் ஈர்த்தது.
யாரும் எதிர்பாராத விதமாக, நார்வேயைச் சேர்ந்த முன்னணி கால்பந்து வீரர் எர்லிங் ஹாலாண்ட் அந்த வீடியோவைப் பார்த்து, “Starting now” என்று பதிலளித்தார். வெறும் இரண்டு வார்த்தைகளில் ஹாலாண்ட் போட்ட இந்த கமெண்ட், இணையத்தில் பெரும் வைரலானதுடன், சாஹில் குப்தாவின் ஜாலியான சவாலை ஒரு தீவிரமான உடற்பயிற்சிப் பயணமாக மாற்றியது.
https://www.instagram.com/reel/DbA1ojFsyd0/?utm_source=ig_web_button_share_sheet
ஹாலாண்டின் இந்த பதில் கால்பந்து ரசிகர்களையும் நெட்டிசன்களையும் பெரிதும் உற்சாகப்படுத்தியுள்ளது. ஒரு விளையாட்டு நட்சத்திரத்தின் சிறிய செயல், ஒருவருக்கு ஆரோக்கியமான மாற்றத்தைத் தொடங்க எவ்வளவு பெரிய தூண்டுதலாக அமைகிறது என்று பலரும் பாராட்டி வருகின்றனர். விளையாட்டு வீரரின் பதிலைத் தொடர்ந்து, சாஹில் குப்தா அளித்த வாக்கின்படி 20 கிலோ எடையைக் குறைக்கும் முயற்சியில் இப்போது இறங்கியுள்ளார்.
