“உடைஞ்சா எங்களுக்கு என்ன…?” லக்கேஜை தூக்கி வீசிட்டு… 3 மணி நேரம் அலையவிட்ட ஏர் இந்தியா..! அம்பலமான அதிர்ச்சி வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“உடைஞ்சா எங்களுக்கு என்ன…?” லக்கேஜை தூக்கி வீசிட்டு… 3 மணி நேரம் அலையவிட்ட ஏர் இந்தியா..! அம்பலமான அதிர்ச்சி வீடியோ..!!

Published

on

சமீர் பஞ்சாபி என்ற பயணி, ஜூலை 20 அன்று கோவாவிலிருந்து மும்பைக்கு ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்தார். தான் வாடகைக்கு எடுத்திருந்த ரூ.55,000 மதிப்புள்ள டிரைபாட் உபகரணத்தை விமான நிலைய ஊழியர்களிடம் ஒப்படைக்கும்போதே, அது உடைந்துவிடக் கூடிய பொருள் என்பதால் கவனமாகக் கையாளும்படி கேட்டுக்கொண்டார்.

ஆனால், பயணம் முடிந்து வந்து பார்த்தபோது அந்த டிரைபாட் உடைந்த நிலையில் இருந்தது. இது குறித்து ஏர் இந்தியா ஊழியர்களிடம் புகார் அளிக்க முயன்ற அவரை, சுமார் 3 மணி நேரம் காத்திருக்க வைத்துள்ளனர். மேலும், ஊழியர்கள் மரியாதைக் குறைவாக நடந்துகொண்டதுடன், ரூ.55,000 சேதத்திற்கு வெறும் ரூ.5,000 மட்டுமே இழப்பீடாக வழங்க முன்வந்துள்ளனர்.

Advertisement

https://www.instagram.com/p/DbFdQLZiHmD/?utm_source=ig_web_button_share_sheet

விமான நிலைய ஊழியர்கள் லக்கேஜ்களை எவ்வளவு அலட்சியமாகத் தூக்கி வீசுகிறார்கள் என்பதைக் காட்டும் வீடியோ ஆதாரத்தையும் சமீர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். வாடகைக்கு எடுத்த டிரைபாட் சேதமடைந்ததால், அதற்கான முழுக் கட்டணத்தையும் தனது சொந்தப் பணத்தில் இருந்தே செலுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள அவர், ஏர் இந்தியா நிறுவனம் பொருட்களின் மதிப்பிற்கு ஏற்பச் சரியான இழப்பீட்டை வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in