LATEST NEWS
நடுரோட்டில் தனியாக கிடந்த தலை…. தந்தை, 5 வயது மகன் கொடூரக் கொலை.. நெல்லையை உலுக்கிய இரட்டைக்கொலை..!!
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே பைக்கில் சென்ற காளிமுத்து மற்றும் அவரது 5 வயது மகன் பிரதீப் ஆகியோரை மர்ம நபர்கள் வழிமறித்து கொடூரமாக வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பயங்கர தாக்குதலில் காளிமுத்துவின் தலையை மட்டும் துண்டித்து நடுரோட்டில் வீசிவிட்டு கொலையாளிகள் தப்பியோடியுள்ளனர். பைக்குடன் காளிமுத்துவின் உடல் மற்றும் அவரது மகனின் உடல் முட்புதரில் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அவரது மூத்த மகன் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த கொடூர இரட்டைக்கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலையாளிகளை விரைந்து கைது செய்வதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
