நெல்லையில் பயங்கரம்..! ஆண் நண்பர்களுடன் தனிமையில் இருக்க வாடகை வீடு… பூட்டிய வீட்டை திறந்தபோது காத்திருந்த அதிர்ச்சி… நகைகளுக்காக நடந்த கொடூரம்..!! – cinefeeds
Connect with us

CRIME

நெல்லையில் பயங்கரம்..! ஆண் நண்பர்களுடன் தனிமையில் இருக்க வாடகை வீடு… பூட்டிய வீட்டை திறந்தபோது காத்திருந்த அதிர்ச்சி… நகைகளுக்காக நடந்த கொடூரம்..!!

Published

on

நெல்லை டவுன் பகுதியில் பூட்டியிருந்த ஒரு வீட்டிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசியதை அடுத்து, போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மரிய ஜெயா என்ற பெண் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த இவர், தனது ஆண் நண்பர்களுடன் தனிமையில் இருப்பதற்காக இந்த வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தது விசாரணையில் தெரியவந்தது. மேலும், வீட்டின் உரிமையாளருக்கு சந்தேகம் வராமல் இருப்பதற்காக சுரேஷ்குமார் என்பவரைக் கணவர் என்று கூறி, போலியான ஆவணங்களையும் அவர் காட்டியுள்ளார்.

மரிய ஜெயாவிடம் இருந்த நகைகளைக் கொள்ளையடிக்கும் நோக்கில் சுரேஷ்குமார் இந்த கொடூரக் கொலையைச் செய்துள்ளது போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. நகைகளுக்காக மரிய ஜெயாவை அடித்துக் கொன்றுவிட்டு, அவரிடமிருந்த நகைகளுடன் சுரேஷ்குமார் தப்பியோடியுள்ளார். இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்திய போலீசார், தலைமறைவாக இருந்த சுரேஷ்குமாரை தற்போது கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in