CINEMA
பெட்ரூமில் ரகசிய கேமரா… நண்பர்களிடம் காட்டி மிரட்டிய கணவன்.. 100 சவரன் நகைகளை இழந்து.. சீரியல் நடிகை கண்ணீர்..!!
விஜய் டிவி சீரியல் நடிகை மோனிஷா, தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘செகண்ட் லவ்’ என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் தனது திருமண வாழ்க்கையில் சந்தித்த கொடூரமான அனுபவங்களை கண்ணீருடன் பகிர்ந்துள்ளார். தனது கணவர் தனக்கு அளித்த கடுமையான மன உளைச்சல்களையும், சித்திரவதைகளையும் அவர் இந்த நிகழ்ச்சியில் வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
அவர் பேசுகையில், தனது அனுமதியின்றி தனது கணவர் படுக்கையறையில் ரகசிய கேமராக்களைப் பொருத்தி வீடியோ எடுத்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், அந்த வீடியோக்களைத் தனது நண்பர்களிடம் காட்டி, தன்னைப் பயமுறுத்தி மிரட்டியதாகவும் மோனிஷா வேதனையுடன் தெரிவித்துள்ளார். இந்தத் துரோகத்தில் இருந்து விடுபட 100 சவரன் நகைகளை இழந்துதான் தான் விவாகரத்து பெற வேண்டியிருந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கொடுமைகளில் இருந்து விவாகரத்து பெற்றுப் பிரிந்துவிட்ட போதிலும், அந்தச் சம்பவங்களின் தாக்கத்தால் தற்போதும் பயத்துடனேயே வாழ்ந்து வருவதாக அவர் கூறியுள்ளார். மோனிஷாவின் இந்த உருக்கமானப் பேச்சைக் கேட்ட ரசிகர்கள் மற்றும் இணையவாசிகள், அவருக்கு ஆதரவாகத் தங்களது கருத்துகளைத் தெரிவித்து ஆறுதல் கூறி வருகின்றனர்.
