“நான் உயிரோடு இருக்கும் வரை நால்வரும் ஒன்றாக முடியாது…!’நண்பர்களை கவனமாக தேர்ந்தெடுங்கள்’..! குடும்ப பிளவுக்கு மத்தியில் ரவிமோகன் அதிரடி பதிவு..!!” – cinefeeds
Connect with us

CINEMA

“நான் உயிரோடு இருக்கும் வரை நால்வரும் ஒன்றாக முடியாது…!’நண்பர்களை கவனமாக தேர்ந்தெடுங்கள்’..! குடும்ப பிளவுக்கு மத்தியில் ரவிமோகன் அதிரடி பதிவு..!!”

Published

on

நடிகர் ரவிமோகன் தனது மனைவி ஆர்த்தியை விட்டுப் பிரிவதாக கடந்த 2024-ம் ஆண்டு அறிவித்தார். ஆனால், தன் ஒப்புதல் இன்றி இந்த அறிவிப்பு வெளியானதாக ஆர்த்தி தெரிவித்திருந்தார். இவர்களின் விவாகரத்து வழக்கு சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், ஆர்த்தி தரப்பில் மாதம் ரூ. 40 லட்சம் கேட்கப்பட்ட நிலையில், அவருக்கு மாதம் ரூ. 3 லட்சம் வழங்க ரவிமோகனுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டதாக செய்திகள் வெளியாகின.

இந்த செய்தி வெளியானதைத் தொடர்ந்து, ஆர்த்தியின் தாயாரும் தயாரிப்பாளருமான சுஜாதா செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது, குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் செலவுகளுக்காகவே ஆர்த்தி அந்தப் பணத்தைக் கேட்டதாகவும், அது அவரது தனிப்பட்ட செலவுகளுக்காக அல்ல என்றும் தெளிவுபடுத்தினார்.

Advertisement

இந்நிலையில், நண்பர்கள் தினத்தை முன்னிட்டு நடிகர் ரவிமோகன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “அனைவருக்கும் இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள். உண்மையான நண்பர்களாக எனக்கு எப்போதும் உறுதுணையாக நின்றவர்களுக்கு நன்றி. சிலர் தொடர்ந்து நீதிமன்ற அவமதிப்புக்கு வழிவகுக்கும் வகையிலான செயல்களில் ஈடுபடுவது வருந்தத்தக்கது. என்னைப் பொறுத்தவரை, நான் உயிரோடு இருக்கும் வரை, நாங்கள் நால்வரும் ஒருபோதும் ஒரே அறையில் ஒன்றாக இருக்கப்போவதில்லை. எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள்; உங்கள் நண்பர்களை புத்திசாலித்தனமாக தேர்ந்தெடுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in