CINEMA
திரையுலகில் மற்றொரு இழப்பு..! நடிகர் & டப்பிங் கலைஞர் ஷ்யாம் குமார் மாரடைப்பால் காலமானார்..!!
பிரபல தமிழ் திரைக்கலைஞரான நடிகர் ஷ்யாம் குமார் ஜீவரத்தினம் மாரடைப்பு காரணமாக காலமானார். இச்சம்பவம் குறித்து அவரது நண்பரும் சக நடிகருமான ஆதேஷ் பாலா சோஷியல் மீடியாவில் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். இவரது திடீர் மறைவு திரைத்துறையினரையும், ரசிகர்களையும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
நடிகர் ஷ்யாம் குமார் ‘ராஜமாபுரம்’ உட்பட 20-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து தன் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். அதுமட்டுமின்றி ‘ஜோக்கர் நாற்காலி’, ‘இட்லி கடை’ போன்ற சுவாரஸ்யமான குறும்படங்களிலும், டப்பிங் கலைஞராகவும் திரைத்துறையில் பணியாற்றியுள்ளார். இவரது மறைவுக்குத் திரையுலகைச் சேர்ந்த பல பிரபலங்களும் தொடர்ந்து தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
