“பணத்துக்காக தயாரிப்பாளர்களோடு உல்லாசமாக இருக்க சொன்னார்” தினமும் கொடூர சித்திரவதை… இப்போ சாப்பாட்டுக்கு வழியில்லாம நிக்குறாரு… ஆமிர்கான் சகோதரர் மீது நடிகை ஈவா குரோவர் அதிர்ச்சி புகார்..!! – cinefeeds
Connect with us

CINEMA

 “பணத்துக்காக தயாரிப்பாளர்களோடு உல்லாசமாக இருக்க சொன்னார்” தினமும் கொடூர சித்திரவதை… இப்போ சாப்பாட்டுக்கு வழியில்லாம நிக்குறாரு… ஆமிர்கான் சகோதரர் மீது நடிகை ஈவா குரோவர் அதிர்ச்சி புகார்..!!

Published

on

பாலிவுட் திரையுலகில் பிரபலமான நடிகை ஈவா குரோவர், முன்னணி நடிகர் ஆமிர்கானின் சகோதரரான தனது முன்னாள் கணவர் ஹைதர் அலி கான் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். கடந்த 2000-ஆம் ஆண்டு இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், மனக்கசப்பு காரணமாக 5 ஆண்டுகளில் விவாகரத்து பெற்று பிரிந்தனர். தற்போது 20 ஆண்டுகளுக்குப் பிறகு மனம் திறந்துள்ள ஈவா, பணத்திற்காகவும் தொழில் வளர்ச்சிக்காகவும் தன்னைப் பல தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களுடன் உடல் ரீதியான தொடர்பில் இருக்குமாறு ஹைதர் அலி வற்புறுத்தியதாகவும், அதற்கு மறுத்ததால் தன்னை மிகக் கொடூரமாகத் துன்புறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த குற்றச்சாட்டுகள் பாலிவுட் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளன. ஈவா குரோவர் இந்தித் திரைப்படங்கள் மட்டுமன்றி, தமிழில் கார்த்திக் நடிப்பில் வெளியான ‘கட்டுமரக்காரன்’ படத்திலும் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. திருமண வாழ்க்கையில் நடந்த இத்தகைய மோசமான அனுபவங்கள் மற்றும் ஹைதர் அலியின் அழுத்தங்கள் குறித்தான இவரது வெளிப்படையான பேச்சுகள் தற்போதைய சினிமா உலகில் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகின்றன.

Advertisement

அதேவேளையில், ஹைதர் அலி கானின் தற்போதைய பரிதாப நிலைக் குறித்தும் ஈவா மனிதாபிமான அடிப்படையில் கவலை தெரிவித்துள்ளார். “இன்று அவருக்குச் சொந்தமாக வீடோ உணவோ இல்லை, நண்பர்களின் உதவியில்தான் தங்கியிருக்கிறார். தவறான பழக்கவழக்கம் உள்ளவர்களால் சூழப்பட்டிருக்கும் அவரை கவனித்துக் கொள்ள யாரும் இல்லை; அவர் ஏற்கனவே நிறைய துன்பங்களை அனுபவித்துவிட்டதால், அவரது இறுதி நாட்களில் அவருக்கு அமைதி கிடைக்க வேண்டும் என்று மட்டுமே பிரார்த்திக்கிறேன்” என உணர்வுப்பூர்வமாகக் கூறியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in