CINEMA
“எனக்கு 99 புருஷன்.. 100-வதாக நீ வரியா..?” ஆபாச கமெண்ட்டுக்கு ரேகா நாயர் கொடுத்த நெத்தியடி பதில்.. அதிரும் இணையம்..!!
இயக்குநர் பார்த்திபன் இயக்கத்தில் வெளியான ‘இரவின் நிழல்’ படத்தின் மூலம் பிரபலமடைந்த நடிகை ரேகா நாயர், சமீபத்திய பேட்டியில் தான் சீரியல்களில் இருந்து முழுமையாக விலகிவிட்டதாகத் தெரிவித்துள்ளார். சீரியல் துறையில் நடிகர், நடிகைகளுக்குச் சரியான மரியாதை, தரமான உணவு மற்றும் உரிய சம்பளம் வழங்கப்படுவதில்லை எனக் குறிப்பிட்ட அவர், மதிப்பும் மரியாதையும் இல்லாத இடத்தில் தொடர விரும்பாததாலேயே சின்னத்திரையை விட்டு வெளியேறியதாகக் கூறியுள்ளார். மேலும், இந்தச் சமூகத்தில் பெண்கள் மீதான பார்வை தவறாக இருப்பதைச் சுட்டிக்காட்டினார்.
மேலும் பெண்களுக்கு எதிரான இழிவான விமர்சனங்களை எதிர்க்கும் பொருட்டே தொடர்ந்து தனது கருத்துகளைப் பதிவு செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். சமூக வலைதளங்களில் பெண்கள் தங்களின் கருத்துகளைப் பதிவிடும் போது, அவர்களை அமுக்கும் நோக்கில் இழிவான வார்த்தைகளைப் பயன்படுத்துவதை அவர் வன்மையாகக் கண்டித்துள்ளார். எனக்கு எத்தனை புருஷன்? என்று ஆபாசமாகக் கேள்வி எழுப்பிய நெட்டிசன்களுக்கு, எனக்கு 99 புருஷன், 100-வதாக நீ வரியா? என்று துணிச்சலாகப் பதிலடி கொடுத்ததாகக் கூறிய அவர், ஆண்கள் செய்யும் தவறுகளை விமர்சிக்காத இந்தச் சமூகம் பெண்களை மட்டும் இலக்காக்குவது நியாயமல்ல என்றும், பெண்களை மதிக்கும் மனப்பான்மை சமூகத்தில் உருவாக வேண்டும் என்றும் ஆவேசமாகப் பேசியுள்ளார்.
