“ராகுலை பின்னுக்குத் தள்ளி… 1.87 கோடி ஃபாலோயர்ஸ்களுடன்… இன்ஸ்டாவில் புயலைக் கிளப்பிய முதல்வர் விஜய்..!!” – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ராகுலை பின்னுக்குத் தள்ளி… 1.87 கோடி ஃபாலோயர்ஸ்களுடன்… இன்ஸ்டாவில் புயலைக் கிளப்பிய முதல்வர் விஜய்..!!”

Published

on

இன்றைய இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் மத்தியில் இன்ஸ்டாகிராம் பயன்பாடும், அதில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருவாய் ஈட்டும் போக்கும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், சமூக வலைதளங்களில் அரசியல் தலைவர்களையும் சினிமா நட்சத்திரங்களையும் பின்தொடர்வதில் இளைஞர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். உலக அளவில் அரசியல் தலைவர்களில் பிரதமர் நரேந்திர மோடி 10.2 கோடி பின்தொடர்பாளர்களுடன் இன்ஸ்டாகிராமில் முதலிடத்தில் உள்ளார். மத்திய அமைச்சர்களில் அமித் ஷாவை 3.22 கோடி பேரும், நிதின் கட்கரியை 66 லட்சம் பேரும் பின்தொடர்கின்றனர்.

தற்போது இந்திய அளவில் முன்னணி தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தியை 1.47 கோடி பேர் பின்தொடர்ந்து வரும் நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவரைப் பின்னுக்குத் தள்ளி முன்னிலை பெற்றுள்ளார். முதலமைச்சர் விஜய்யை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 1.87 கோடியாக உயர்ந்துள்ளது. மேலும், மஜ்லீஸ் கட்சித் தலைவர் ஓவைசியை 1.25 கோடி பேரும், பிரியங்கா காந்தி மற்றும் கெஜ்ரிவால் ஆகியோரைத் தலா 40 லட்சம் பேரும், தமிழக முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை 23 லட்சம் பேரும் பின்தொடர்ந்து வருகின்றனர்.

Advertisement

இன்று இன்ஸ்டாகிராம் வெறும் பொழுதுபோக்குத் தளமாக மட்டுமின்றி, முக்கிய அரசியல் பிரசாரக் களமாகவும் உருவெடுத்துள்ளது. இளைஞர்களின் ஆதரவைப் பெரிதும் பெற்றதன் விளைவாகவே விஜய்க்கு இன்ஸ்டாகிராமிலும் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்துள்ளது. தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் கட்சியின் செயல்பாடுகளை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கவும், கட்சித் தொண்டர்கள் மற்றும் இளைஞர்களுடன் தொடர்பில் இருக்கவும் சமூக வலைதளங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in