CINEMA
“கடைசி நிமிடத்தில் தலைகீழாக மாறிய வழக்கு..!” ஆர்த்திக்கு நீதிமன்றம் போட்ட அதிரடி செக்.. ஜெயம் ரவி வழக்கில் கிடைத்த மாஸ் தீர்ப்பு..!!
தமிழ் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நடிகர் ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி ஆர்த்தி இடையிலான விவாகரத்து வழக்கு, சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தன் மனைவி ஆர்த்தியைப் பிரிவதாக அறிவித்த ஜெயம் ரவி, நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இதனிடையே, வழக்கு விசாரணை முடியும் வரை தன் மாதாந்திர செலவுகளுக்காக ரவி மோகன் மாதம் ரூ. 40 லட்சம் ஜீவனாம்சமாக வழங்க வேண்டும் என ஆர்த்தி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த ரூ. 40 லட்சம் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம், வழக்கு முடியும் வரை ஆர்த்திக்கு மாதம் ரூ. 3 லட்சம் இடைக்கால பராமரிப்புத் தொகையாக ரவி வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கில் மற்றொரு முக்கிய திருப்பமாக, தங்களது மகன்கள் ஆரவ் மற்றும் அயான் ஆகியோரைத் தந்தை ஜெயம் ரவி சந்திப்பதற்கு நீதிமன்றம் முழு அனுமதி அளித்துள்ளது.
முன்னதாக, ஆர்த்தி தன் மகன்களைத் தன்னைச் சந்திக்க விடாமல் தடுப்பதாகவும், பள்ளிக்குக் கூட பாதுகாவலர்களுடன் அனுப்பி வைப்பதாகவும் ரவி வேதனையுடன் தெரிவித்திருந்தார். மேலும், மகன்கள் பயணித்த கார் விபத்தில் சிக்கிய தகவலைக் கூட ஆர்த்தி தன்னிடம் மறைத்துவிட்டதாகவும், பதறியடித்து ஓடியும் பிள்ளைகளைப் பார்க்க அனுமதிக்கவில்லை என்றும் அவர் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியிருந்தார். தற்போது நீதிமன்றம் பிறப்பித்துள்ள இந்த உத்தரவின் மூலம், தன் அன்பு மகன்களைச் சந்திப்பதில் ரவி மோகனுக்கு இருந்த தடைகள் முற்றிலும் நீங்கியுள்ளன. வழக்கு விசாரணையின் போது பிள்ளைகளைப் பார்க்க முடியாமல் தவித்து வந்த ரவிக்கு, நீதிமன்றத்தின் இந்த அதிரடி முடிவு மிகப்பெரிய மன நிவாரணத்தையும் மகிழ்ச்சியையும் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
