பொன்னியின் செல்வன் ‘ராஜா’வுக்கு வந்த சோதனை…!விவாகரத்து, பெயர் மாற்றம், கண்ணீர்…! இப்போது ரவி மோகன் எடுத்திருக்கும் அந்த ‘திடீர்’ முடிவு…! – cinefeeds
Connect with us

CINEMA

பொன்னியின் செல்வன் ‘ராஜா’வுக்கு வந்த சோதனை…!விவாகரத்து, பெயர் மாற்றம், கண்ணீர்…! இப்போது ரவி மோகன் எடுத்திருக்கும் அந்த ‘திடீர்’ முடிவு…!

Published

on

தமிழ் சினிமாவில் எவ்வித சர்ச்சைகளிலும் சிக்காமல், ஆரம்பம் முதலே தனது திரைப்பயணத்தை மிகவும் நாகரீகமாகவும் வெற்றிகரமாகவும் கொண்டு சென்றவர் நடிகர் ஜெயம் ரவி . குறிப்பாக, மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் அருள்மொழிவர்மனாக ராஜராஜ சோழன் நடித்து ஒட்டுமொத்த தமிழ் மக்களின் இதயங்களிலும் மிகப்பெரிய இடத்தைப் பிடித்தார். சினிமாவில் உச்சத்தில் இருந்த இவருக்கு, கடந்த ஒரு வருட காலமாகவே சொந்த வாழ்க்கையில் கடுமையான சோதனைகளும் பிரச்சனைகளும் அடுத்தடுத்து ஏற்பட்டு வருவது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு தனது மனைவியை விவாகரத்து செய்யப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்ததில் இருந்து ரவி மோகனின் வாழ்க்கையில் பல அதிரடி மாற்றங்கள் அரங்கேறின. தனது பெயரை ‘ஜெயம் ரவி’ என்பதில் இருந்து ரவி மோகன் என மாற்றியதோடு, தனது வீடு, அலுவலகம் என அனைத்தையுமே புதிய இடத்திற்கு மாற்றினார். இதற்கிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு வீடியோ ஒன்றில் பேசிய அவர், தனது மனைவி தரப்பில் இருந்து தனக்கு கடுமையான மன உளைச்சல்களும் பிரச்சனைகளும் தரப்படுவதாகக் கூறி கண்ணீர்விட்டு அழுதார். மேலும், தனது குழந்தைகளைத் தன்னுடன் பேசவும் பார்க்கவும் விடாமல் தடுக்கிறார்கள் என்றும், தனக்கு எதிராக ‘பிளாக் மேஜிக்’ (பில்லி சூனியம்) செய்யப்பட்டுள்ளது என்றும் பரபரப்பு குற்றச்சாட்டுகளை அடுக்கினார். இதுகுறித்த அனைத்து ஆதாரங்களையும் விரைவில் வெளியிடப்போவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

Advertisement

இப்படிப்பட்ட கடுமையான மன வேதனைகள் மற்றும் குடும்பப் பிரச்சனைகளுக்கு மத்தியில், அதிலிருந்து விடுபட்டு மன அமைதி தேடும் முயற்சியில் ரவி மோகன் தற்போது இறங்கியுள்ளார். இதன் ஒரு பகுதியாக, அவர் ஐயப்ப சாமிக்கு மாலை அணிந்து, கடுமையான விரதத்தை மேற்கொண்டுள்ளார். ஐயப்ப சுவாமி உடையில், ஆன்மீகப் பாதையில் அவர் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இப்புகைப்படத்தைப் பார்த்த அவரது ரசிகர்கள், ரவி மோகனின் வாழ்க்கையில் இருக்கும் அனைத்துப் பிரச்சனைகளும் நீங்கி, விரைவில் அவர் பழையபடி மன அமைதியுடன் திரும்புவதற்கு தங்களது ஆறுதல்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in