CINEMA
இனிமே நான் நடிகர் மட்டுமல்ல, சினிமாவுல ஒரு கலக்கு கலக்கப் போறேன், நடிகர் விஷால் போட்ட அதிரடி பிளான் – பாஸூ பார்த்து பாஸூ என்று கலாய்க்கும் ரசிகர்கள்!
மகுடம் என்ற படத்தில் நடிகர் விஷால் ஹீரோவாக நடித்து வந்தார். அவருக்கும் அந்த படத்தின் இயக்குனருக்கும் மோதல் ஏற்பட்ட நிலையில் இயக்குனர் வெளியேறி விட்டார். தற்போது மகுடம் படத்தை முதன்முறையாக நடிகர் விஷாலே இயக்குனராக மாறி இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஷால் நெகட்டிவ் ரோலில் தன்னை புதிய கோணத்தில் வெளிப்படுத்தி உள்ளார்.
மேலும் ஏற்கனவே நான் இயக்குவதாக திட்டமிட்டு இருந்த துப்பறிவாளன் 2 படத்தை இயக்கி நடிக்கப் போகிறேன். அத்துடன் இனி நான் நடிக்கும் படங்களை நானே இயக்கப் போகிறேன். இளைஞர்களை கவரக்கூடிய அதிரடி ஆக்சன் கதைகள் படங்களை எடுக்க திட்டமிட்டுள்ளேன் என்றும் நடிகர் விஷால் அதிரடியாக கூறியிருக்கிறார். ஹீரோவாக பல மொக்கை படங்களை தந்தவர் விஷால் என்பதால் பாஸூ பார்த்து பாஸூ என்று ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
