CINEMA
இந்தியில் முதல் படம்தான் என்னை ஏமாற்றி விட்டது, 2வது படத்தில் என்னுடைய முழு திறமையை காட்டியிருக்கிறேன் – நடிகர் கீர்த்தி சுரேஷ் தந்த ஓபன் ஸ்டேட்மென்ட்!
தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து ரசிகர்களின் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றவர் கீர்த்தி சுரேஷ். திருமணத்துக்கு முன்பு பேபி ஜான் என்ற இந்தி படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷூக்கு அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. தற்போது திருமணத்துக்கு பிறகு ரப்தார் என்ற இந்தி படத்தில் நடித்திருக்கும் கீர்த்தி சுரேஷ் முந்தைய படத்தின் விட்ட வெற்றியை இந்த படத்தில் கண்டிப்பாக கைப்பற்றி விடுவேன் என்கிறார்.
முதல் இந்தி படத்தில் கிளாமராக நடித்த நான் இந்த படத்தில் சரியான பெர்பாஃமன்ஸ் நடிகையாக என்னுடைய தனித்திறமையை வெளிப்படுத்தி இருக்கிறேன் என்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் கூறியிருக்கிறார். திருமணத்துக்கு பிறகும் நடித்து வரும் கீர்த்தி சுரேஷூக்கு தொடர்ந்து பட வாய்ப்புகளும் வந்துக்கொண்டு இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
