LATEST NEWS
கவர்ச்சி குயினாக களம் இறங்கிய கீர்த்தி சுரேஷ்.. அதுக்குன்னு இப்படியா?.. லேட்டஸ்ட் ஹாட் போட்டோ ஷூட்..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் இளைஞர்களின் கனவு கன்னியான நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் முதல் முதலாக இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அந்த திரைப்படத்திற்கு பிறகு இவர் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் நடிகை சாவித்திரி வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட நடிகையர் திலகம் என்ற திரைப்படத்தில் சாவித்திரி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதை வெகுவாக வென்ற கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.
அதன் மூலம் இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது. அதனை தொடர்ந்து சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ் மிஸ் இந்தியா மற்றும் பென்குயின் ஆகிய ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படங்களிலும் நடித்தார்.
அடுத்ததாக அண்ணாத்த திரைப்படத்தில் ரஜினியின் பாசமான தங்கையாக நடித்த இவர் செல்வராகவன் நடிப்பில் வெளியான சாணி காகிதம் திரைப்படத்திலும் நடித்து அசத்தார். இதனைத் தொடர்ந்து சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற தசரா திரைப்படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
தற்போதைய திரையில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் மாமன்னன் திரைப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.
இந்நிலையில் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் தற்போது கிளாமர் காட்டி வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.