கைக்குழந்தையுடன் 2 நாட்களாக ஒரே துணியுடன்.. லண்டனில் சிக்கிய சிம்பு பட நடிகை.. . அதிர்ச்சி வீடியோ.. - cinefeeds
Connect with us

LATEST NEWS

கைக்குழந்தையுடன் 2 நாட்களாக ஒரே துணியுடன்.. லண்டனில் சிக்கிய சிம்பு பட நடிகை.. . அதிர்ச்சி வீடியோ..

Published

on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு நடிப்பில் வெளியான திரைப்படம் தான் சிலம்பாட்டம். இந்த திரைப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை தான் சனா கான். இந்த திரைப்படத்தை தொடர்ந்து ஒரு நடிகையின் டைரி மற்றும் பயணம் உள்ளிட திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். இஸ்லாம் மதத்தை சேர்ந்த இவர் முழுமையாக மதத்தை பின்பற்றுவதற்காக நடிப்பதை நிறுத்திவிட்டு சினிமாவில் இருந்து விலகினார். அதன் பிறகு சூரத்தை சேர்ந்த தொழிலதிபர் முப்தி அனாஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவருக்கு கடந்த ஜூலை மாதம் தான் ஆண் குழந்தை பிறந்தது. தற்போது தன்னுடைய கணவர் மற்றும் குழந்தையுடன் லண்டனுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இவர் விமான நிலையத்தில் உடமைகளை இழந்து தவித்து வருகின்றார். ஹோட்டல் அறையில் தங்கி இருக்கும் இவர் அங்கிருந்து வெளியிட்டுள்ள வீடியோவில், நான் லண்டனில் வந்து இறங்கி இரண்டு நாட்கள் ஆகியும் என்னுடைய உடமைகள் பற்றி எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை.

Advertisement

மாற்றுத் துணி கூட இல்லாமல் இரண்டு நாட்களாக ஒரே துணியை அணிந்து கொண்டிருக்கிறேன். எனது குழந்தைக்கும் தினமும் 5 உடைகள் மற்றும் 10 டயபர் மாற்ற வேண்டும். அதனை செய்ய முடியாமல் நான் மிகவும் சிரமப்படுகிறேன். எனவே விமான நிறுவனம் உடனடியாக இந்த பிரச்சனையில் கவனம் செலுத்தி என்னுடைய உடமைகள் அனைத்தையும் மீட்டு தர உதவ வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Saiyad Sana Khan இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@sanakhaan21)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in