கைய பிடிச்சு இழுத்து அந்த மாதிரி பண்ணாரு.. படப்பிடிப்பு தளத்தில் அத்துமீறிய டான்ஸ் மாஸ்டர்.. நடிகை பரபரப்பு புகார்..!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

கைய பிடிச்சு இழுத்து அந்த மாதிரி பண்ணாரு.. படப்பிடிப்பு தளத்தில் அத்துமீறிய டான்ஸ் மாஸ்டர்.. நடிகை பரபரப்பு புகார்..!!

Published

on

பிரபலமான வங்க மொழி நடிகைகளில் ஒருவர்தான் நடிகை சயந்திகா பனார்ஜி. இவர் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி பிரமுகராகவும் இருந்து வருகின்றார். இந்த நிலையில் இவர் சமீபத்தில் சாய்பஜ் என்ற திரைப்படத்தில் நடிப்பதற்காக வங்கதேசம் சென்றிருந்தார். அங்கு படப்பிடிப்பின் போது நடன இயக்குனர் மைக்கேல் தன்னிடம் அத்துமீறி தவறாக நடந்து கொண்டதாக இவர் பரபரப்பு புகாரை தெரிவித்துள்ளார்.

அதனால் படத்தில் தொடர்ந்து நடிப்பதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டு இவர் கொல்கத்தா திரும்பிவிட்டார். இது தொடர்பாக அவர் கூறுகையில், படப்பிடிப்பு தளத்தில் மற்றும் நடன ஒத்திகையின் போது மைக்கேல் என்னிடம் பலமுறை தவறாக நடப்பதற்கு முயற்சி செய்தார். அதுமட்டுமல்லாமல் என்னுடைய கையைப் பிடித்து இழுத்த போது உடன்பட மறுத்ததும் அவர் என்னை மிரட்டினார்.

Advertisement

படப்பிடிப்பு தளத்தில் அவரது அத்துமீறலை படக்குழுவினர் அனைவருக்கும் நான் தெரிவித்தேன். இருந்தாலும் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து எனக்கு எந்த ஒரு ஆதரவும் கிடைக்காததால் கொல்கத்தா திரும்பி விட்டேன் என்று அவர் கூறியுள்ள நிலையில் தற்போது அவர் கூறியுள்ள இந்த கருத்து திரை உலகில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement