CINEMA
த்ரிஷாவை தேர்ந்தெடுக்க இது தான் காரணம்… அமீர் பகிர்ந்த தகவல்….!!

தமிழ் திரை உலகில் பிரபல நடிகைகளில் ஒருவர் த்ரிஷா. இவர் ஜோடி திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதன் பிறகு கதாநாயகியாக த்ரிஷா முதன் முதலில் அறிமுகமான படம் மௌனம் பேசியதே. 2002 ஆம் ஆண்டு வெளியான மௌனம் பேசியதே படத்தை இயக்குனர் அமீர் இயக்கி இருந்தார்.
இந்த படத்தில் சூர்யா கதாநாயகனாக நடித்தார். மேலும் லைலா சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். அப்போதைய காலகட்டத்தில் மௌனம் பேசியதே படம் ரசிகர்கள் கொண்டாடும் படமாக அமைந்தது. இந்த படத்தில் திரிஷாவின் நடிப்பும் வெகுவாக பாராட்டப்பட்டது.
இந்நிலையில் இந்தப் படத்தின் இயக்குனர் த்ரிஷாவை கதாநாயகியாக தேர்ந்தெடுத்தது எப்படி என்பது குறித்து பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். அவர் கூறிய போது தனக்கு சிறு வயது முதலே புத்தகம் படிக்கும் பழக்கம் உள்ளது என்றும் ஒரு சினிமா புத்தகத்தில் தான் த்ரிஷாவை முதன்முதலில் பார்த்ததாகவும் கூறியுள்ளார்.
அதன் பிறகு தான் த்ரிஷா யார் என்றும் அவரைப் பற்றி முழு விபரங்களையும் அமீர் சேகரித்துள்ளார். அதோடு த்ரிஷாவை படத்தில் அறிமுகப்படுத்துவதற்கு முன்பே அவர் நிச்சயம் மிகப்பெரிய நடிகையாக வருவார் என்பது தனக்கு தெரிந்தது என்று கூறியுள்ளார். அதற்கேற்ற போல் த்ரிஷாவும் பிரபல நடிகையாக வளர்ந்து இன்றும் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கிறார்.