என் வாழ்க்கையின் 2 முக்கியமான நபர்களுக்கு…. இன்று ஒரு பெரிய நாள்…. கீர்த்தி சுரேஷ் போட்ட பதிவு…!! - cinefeeds
Connect with us

CINEMA

என் வாழ்க்கையின் 2 முக்கியமான நபர்களுக்கு…. இன்று ஒரு பெரிய நாள்…. கீர்த்தி சுரேஷ் போட்ட பதிவு…!!

Published

on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் நடித்த முதல் படமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. இதனை தொடர்ந்து விஜய், சூர்யா, அஜித் என பல முன்னணி நடிகர்களோடு சேர்ந்து நடித்தார். தற்போது தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என தமிழ் பழமொழி படங்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் இன்று வாழை மற்றும் கொட்டுக்காளி திரைப்படம் திரையரங்குகளில் இன்று வெளியாகியுள்ளது.

நடிகர்கள், நடிகைகள் பலரும் படக்குழுவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்தவரிசையில் தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்டுள்ள பதிவில், என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான நபர்களுக்கு இன்று ஒரு பெரிய நாள்  “வாழை” படத்திற்காக  @mari_selvaraj sir அவர்களுக்கும், “கொட்டுக்காளி” படத்திற்காக  @sooriofficial அண்ணனுக்கும் பிரம்மாண்ட வெற்றி கிடைக்க வாழ்த்துகள் என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement

Advertisement