GOAT பார்த்த விஜய்…. படம் எப்படி இருக்கு….? என்ன வார்த்தை சொன்னார் தெரியுமா….? - cinefeeds
Connect with us

CINEMA

GOAT பார்த்த விஜய்…. படம் எப்படி இருக்கு….? என்ன வார்த்தை சொன்னார் தெரியுமா….?

Published

on

தமிழ் திரை உலகின் பிரபல நடிகர்களில் முக்கியமானவர் தளபதி விஜய். நடிகராக இருந்த விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கியதன் மூலம் அரசியலிலும் களம் இறங்கியுள்ளார். இதனிடையே செப்டம்பர் 5 அன்று விஜய் நடிப்பில் கோட் திரைப்படம் வெளியாக இருக்கிறது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த கோட் திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தளபதி விஜய் அவர்கள் நடித்த படம் என்றாலே வரவேற்பு அதிகமாக இருக்கும்.

Advertisement

இதில் கோட் திரைப்படத்தில் பிரபுதேவா, பிரசாந்த், மோகன், சினேகா, லைலா உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் பலர் நடித்திருப்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

ஏற்கனவே படத்தில் உள்ள இரண்டு பாடல்கள் வெளியாகி ஹிட் பாடல்களாக கொண்டாடப்படும் நிலையில் ஆகஸ்ட் மாதத்தின் இறுதியில் கோட் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என்று கூறப்படுகிறது.

Advertisement

இந்நிலையில் இந்த படத்தின் முதல் பாதியை தளபதி விஜய் அவர்கள் சமீபத்தில் பார்த்துள்ளார். படத்தைப் பார்த்துவிட்டு அவர் என்ன கூறினார் என்பதுதான் அனைவரது எதிர்பார்ப்புமே. அதன்படி GOAT திரைப்படத்தின் முதல் பாதியை பார்த்த தளபதி விஜய் அவர்கள் படம் தெறிக்கிறது என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

இது போதுமே ரசிகர்களுக்கு, படம் வெளியாவதற்கு முன்பே கொண்டாடி தீர்த்து விடுவார்கள். ஆனாலும் செப்டம்பர் 5 வெளியாகும் இந்த படம் எந்த அளவிற்கு வெற்றி படமாக அமைகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in