முதல் படமே இத்த்னை கோடியா..? விஜய் மகன் சஞ்சய் படத்தின் பட்ஜெட் குறித்து வெளியான தகவல்..!! - cinefeeds
Connect with us

CINEMA

முதல் படமே இத்த்னை கோடியா..? விஜய் மகன் சஞ்சய் படத்தின் பட்ஜெட் குறித்து வெளியான தகவல்..!!

Published

on

நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் வெளிநாட்டில் சினிமா குறித்த படிப்பை முடித்துவிட்டு தன்னுடைய முதல் படத்தை எடுக்க தொடங்கிவிட்டார். லைகா நிறுவனம் சார்பாக தன்னுடைய முதல் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்காக முன் தயாரிப்பு பணிகள் நீண்ட நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் ஹீரோவாக சந்தீப் கிஷன் நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் விஜய் மகன் சஞ்சய் இயக்கும் படத்தின் பட்ஜெட் குறித்த தகவல் வெளியாகியுள்ளது,

இந்த படத்தின் மொத்த பட்ஜெட் 25 கோடி என்று கூறப்படுகிறது. ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் 25 கோடியை லைகா நிறுவனத்திடம் இருந்து வாங்கி ஜேசன் சஞ்சய் ஜோசப் மீடியா என்டர்டைன்மென்ட் என்ற நிறுவனத்தை வைத்து தயாரிப்பு வேலைகளை செய்து வருகிறாராம். இயக்குனராக மட்டுமின்றி இந்த படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் அறிமுகம் ஆகிறார் சஞ்சய்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in