CINEMA
நடிகர் விஜய் சினிமாவிலிருந்து ஓய்வுபெற மாட்டார்…. சொன்னது யார் தெரியுமா…??
முழு நேர அரசியல்வாதியாக விஜய் மாறவுள்ள நிலையில் அவருடைய கடைசி படமான தளபதி 69 படத்திற்கான அப்டேட் இன்று வெளியாகவுள்ளது. இதனால் அவருடைய ரசிகர்கள் ஒருபக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும், இன்னொரு பக்கம் கடைசி படம் என்பதால் சோகமாகவும் இருக்கிறார்கள். இந்நிலையில் நடிகர் சசிகுமார், விஜய் சினிமாவிலிருந்து விஜய் ஓய்வுபெற மாட்டார் என ர் தெரிவித்துள்ளார்.
அரசியலில் இருந்துகொண்டே, சினிமாவிலும் விஜய் நடிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர், அடுத்த ஒரு படத்தோடு ஓய்வுபெற மாட்டார் என்று தான் நம்புவதாகவும் கூறியுள்ளார். முன்னதாக நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ள விஜய், 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவோம் என தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.