CINEMA
சதிஷ் ஆக்ஷ்ன் ஹீரோவாக நடிக்கும்…. “சட்டம் என் கையில்” படத்தின் டீசர் வெளியானது…!!
காமெடி நடிகராக வலம்வந்த நடிகர் சதீஷ் கடந்த சில வருடங்களாக ஹீரோவாக நடித்து வருகிறார். அவர் ஹீரோவாக நடித்த நாய்சேகர் மற்றும் கான்ஜூரிங் கண்ணப்பன் உள்பட சில படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் சதீஷ் அடுத்து ’சட்டம் என் கையில்’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக வித்யா நடித்துள்ளார்.
இந்த திரைப்படம் செப்டம்பர் 20ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சாச்சி இயக்கத்தில் உருவாகிய இந்த படத்திற்கு முத்தையா ஒளிப்பதிவும் மார்ட்டின் டைட்டஸ் படத்தொகுப்பு பணியும் செய்துள்ளனர். இந்த படத்திற்கு ஜோன்ஸ் என்பவர் இசையமைத்துள்ளார். இந்நிலையில் படத்தின் டீசர் நேற்று வெளியாகியுள்ளது.