சீனியர் இயக்குநர்களுக்கு நோ சொன்ன சிம்பு…!இளம் இயக்குநர்களின் பக்கம் திரும்பிய எஸ்டிஆரின் பார்வை…!நூறு கோடி வசூல் வேட்டைக்கு பின் சிம்புவை லாக் செய்த கீர்த்திஸ்வரன்…! – cinefeeds
Connect with us

CINEMA

சீனியர் இயக்குநர்களுக்கு நோ சொன்ன சிம்பு…!இளம் இயக்குநர்களின் பக்கம் திரும்பிய எஸ்டிஆரின் பார்வை…!நூறு கோடி வசூல் வேட்டைக்கு பின் சிம்புவை லாக் செய்த கீர்த்திஸ்வரன்…!

Published

on

தமிழ் திரையுலகில் தனது அசாத்திய திறமையால் தனி முத்திரை பதித்த நடிகர் சிம்பு, இடையில் ஏற்பட்ட சில சறுக்கல்களைத் தகர்த்தெறிந்துவிட்டு தற்போது தனது இரண்டாவது இன்னிங்ஸில் செம பிஸியாக வலம் வருகிறார். ‘மாநாடு’, ‘வெந்து தணிந்தது காடு’, ‘பத்து தல’, ‘தக் லைஃப்’ என அடுத்தடுத்து வித்தியாசமான ஜானர்களில் நடித்து மிரட்டியவர், தற்போது இயக்குநர் வெற்றிமாறனின் ‘அரசன்’ படத்தில் தீவிரமாகப் பணியாற்றி வருகிறார். சினிமாவின் சீனியர் உச்ச நட்சத்திரங்களான ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகியோர் இளம் சென்சேஷனல் இயக்குநர்களுடன் கூட்டணி அமைப்பதைப் போல, சிம்புவும் தற்போது முழுக்க முழுக்க இளம் திறமையாளர்களின் பக்கம் தனது கவனத்தைத் திருப்பியுள்ளார்.

வெற்றிமாறனின் ‘அரசன்’ படத்தைத் தவிர்த்து சிம்புவின் கைகளில் இருக்கும் அஷ்வத் மாரிமுத்து, தேசிங்கு பெரியசாமி மற்றும் ராம்குமார் பாலகிருஷ்ணன் ஆகியோரின் திரைப்படங்கள் அனைத்துமே இளம் தலைமுறை இயக்குநர்களுடையதுதான். அமரன் படத்தின் மெகா ஹிட்டிற்குப் பிறகு ராஜ்குமார் பெரியசாமியுடன் தனுஷ் கைகோர்த்ததைப் போல, சிம்புவும் தனது கரியரை இன்னும் ஃப்ரெஷ்ஷாக கொண்டு செல்ல கோலிவுட்டின் தற்போதைய சென்சேஷனல் இயக்குநர் ஒருவருடன் இணையவிருப்பதாகப் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அந்த இயக்குநர் வேறு யாருமல்ல, சமீபத்தில் வெளியாகி நூறு கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து மெகா பிளாக்பஸ்டர் அடித்த ‘டியூட்’ திரைப்படத்தின் இயக்குநர் கீர்த்திஸ்வரன் தான்.

Advertisement

இயக்குநர் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்து சினிமா நுணுக்கங்களைக் கற்ற கீர்த்திஸ்வரன், ‘டியூட்’ படத்தில் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ, சரத்குமார் ஆகியோரை வைத்து முற்போக்கான கருத்தை ஜென் ஸி (Gen Z) தலைமுறைக்கு ஏற்ற ஸ்டைலில் தந்து ஒட்டுமொத்த சினிமாவையும் திரும்பிப் பார்க்க வைத்தார். இயக்குநர் பா.இரஞ்சித் உள்ளிட்ட பலரின் பாராட்டுகளைப் பெற்ற இவருடன் சிம்பு இணையும் புதிய படத்திற்கு, லேட்டஸ்ட் மியூசிக் சென்சேஷன் சாய் அபயங்கர் இசையமைக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. சிம்புவின் இந்த அதிரடி காம்போ குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதால் எஸ்டிஆர் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in