CINEMA
நம்மை சிரிக்கவச்சவருக்கு இப்படி ஒரு நிலைமையை …!அன்னைக்கு செஞ்ச அந்த தப்புதான் காரணம்…!23 வருடங்களுக்குப் பின் வெளியான நெஞ்சை உலுக்கும் உண்மை…! இறுதிக்காலத்தில் கவனிப்பாரற்று வறுமையில் மரணித்த நடிகர் கருப்பு சுப்பையா… !
தமிழ் திரையுலகில் 1980 மற்றும் 90-களில் நகைச்சுவையின் ஜாம்பவான்களாகத் திகழ்ந்த கவுண்டமணி – செந்தில் கூட்டணியுடன் இணைந்து நடித்து, ரசிகர்களிடையே பெரும் கவனம் பெற்றவர் நடிகர் கருப்பு சுப்பையா. ‘பெரிய மருது’, ‘கட்டபொம்மன்’ உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை வேடங்களில் இவர் நடித்துள்ளார். குறிப்பாக, ஒரு திரைப்படத்தில் நடிகர் கவுண்டமணி இவரைப் பார்த்து ‘ஆப்பிரிக்கா அங்கிள்’ என்று அழைக்கும் வசனம் இன்றுவரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம்.
இந்நிலையில், இயக்குநர் என்.கே. விஸ்வநாதன் இயக்கத்தில் வெளியான ‘பெரிய மருது’ திரைப்படத்தில், கவுண்டமணியும் செந்திலும் ஈயம் பூசும் தொழில் செய்பவர்களாக நடித்திருப்பார்கள். அதில் தன்னிடம் இல்லாத ஒரு அண்டாவிற்கு ஈயம் பூச எவ்வளவு செலவாகும் என்று கருப்பு சுப்பையா கேட்க, ஆத்திரமடையும் கவுண்டமணியும் செந்திலும் அவரது உடல் முழுவதிலும் ஈயம் பூசி (பெயிண்ட் அடித்து) அசிங்கப்படுத்துவது போல் அக்காட்சி அமைக்கப்பட்டிருக்கும். இன்றுவரை பலரையும் சிரிக்க வைக்கும் இந்த உன்னதமான நகைச்சுவைக் காட்சிதான், நிஜ வாழ்க்கையில் கருப்பு சுப்பையாவின் மரணத்திற்கு முக்கியக் காரணமாக அமைந்து அவரது வாழ்க்கையையே தலைகீழாக மாற்றியுள்ளது.
அந்தத் திரைப்படக் காட்சியில் நடிக்கும்போது, எவ்விதப் பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி கருப்பு சுப்பையாவின் உடல் முழுவதும் உண்மையான பெயிண்ட் அடிக்கப்பட்டுள்ளது. இதனால் அவரது உடலுக்குள் பெயிண்ட்டில் இருந்த நச்சு இரசாயனங்கள் ஊடுருவி, கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டு அவர் பாதிக்கப்பட்டதாக மறைந்த இயக்குநரும் நடிகருமான மனோபாலா பேட்டி ஒன்றில் உருக்கமாகத் தெரிவித்துளார். இந்தத் திரையுலக விபரீதத்தால் உடல்நலம் குன்றிய கருப்பு சுப்பையா, தன் இறுதிக்காலத்தில் பட வாய்ப்புகளும் இல்லமால், கவனிப்பாரும் இன்றி வறுமையில் வாடி கடந்த 2013-ஆம் ஆண்டு பரிதாபமாக உயிரிழந்தார். ரசிகர்களை மகிழ்வித்த ஒரு கலைஞனின் வாழ்க்கை இத்தகைய துயரத்தில் முடிந்தது கோலிவுட்டில் இன்றும் ஒரு சோக வடுக்காகவே உள்ளது.
