CINEMA
அடப்பாவமே..! ஆசை ஆசையாய் வளர்த்த பூனையால் இப்படி ஒரு சோதனையா..?! முக வீக்கத்தால் ஸ்ருதி ஹாசன் எடுத்த வேதனையான முடிவு..!!
தென்னிந்திய சினிமாவில் பாடகியாகவும் நடிகையாகவும் திகழ்ந்து வரும் நடிகை ஸ்ருதி ஹாசன், தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகைத் தாண்டி பாலிவுட்டிலும் கால் பதித்து நடித்து வருகிறார். இவர் இயல்பாகவே செல்லப் பிராணிகள் மீது, குறிப்பாக பூனைகள் மீது மிகுந்த அன்பு கொண்டவர்.
அந்த வகையில், அவர் அண்மையில் ஆசையாக ஒரு பூனையை வளர்த்து வந்தார். ஆனால், எதிர்பாராதவிதமாக அந்தப் பூனையின் காரணமாக அவருக்குத் தோலில் ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது. மேலும், இதனால் அவரது முகத்தில் வீக்கமும் கொப்பளங்களும் தோன்றியதால் அவர் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்.
இந்த உடல்நலப் பிரச்சனை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, வேறு வழியின்றித் தான் வளர்த்து வந்த பூனையை அதன் பழைய உரிமையாளரிடமே மீண்டும் ஒப்படைக்க ஸ்ருதி ஹாசன் முடிவெடுத்துள்ளார். ஆசையாக வளர்த்த பிராணியைப் பிரிய வேண்டிய சூழல் ஏற்பட்டதால் மிகுந்த மனவேதனையுடன் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
