LATEST NEWS
“எதிர்பார்த்த அந்த நாள் வந்தாச்சு..!” 10 ஆண்டு காதலுக்குப் பின்… 5 குழந்தைகள் முன்னிலையில் திருமணம் செய்த ரொனால்டோ– ஜார்ஜினா..!!
போர்ச்சுகல் கால்பந்து நட்சத்திரமான கிறிஸ்டியானோ ரொனால்டோவும், அவரது நீண்டகாலக் காதலியான ஜார்ஜினா ரோட்ரிக்ஸும் சுமார் 10 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த பிறகு அதிகாரப்பூர்வமாகத் திருமணம் செய்து கொண்டுள்ளனர். போர்ச்சுகலின் காஸ்காய்ஸ் நகரில் நடைபெற்ற இந்தத் திருமண நிகழ்வில், தங்களது 5 குழந்தைகளின் முன்னிலையில் இருவரும் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.
திருமணத்திற்குப் பிறகு, இருவரும் தங்களது மோதிரம் அணிந்த கைகளின் புகைப்படங்களைச் சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டனர். ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடிய 2016-ஆம் ஆண்டில் இவர்கள் முதன்முதலில் சந்தித்துக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து காதலித்து வந்த இவர்கள், 2017-ஆம் ஆண்டில் தங்களது உறவை அதிகாரப்பூர்வமாக வெளியுலகிற்கு உறுதிப்படுத்தினர்.
குழந்தைகள் பிறந்த பிறகும் இவர்கள் திருமணம் செய்து கொள்ளாமல் இணைந்து வாழ்ந்து வந்ததால், இவர்களது திருமணம் எப்போது நடக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நீண்டகாலமாக இருந்து வந்தது. தற்போது 10 ஆண்டுகால காதலுக்குப் பிறகு இவர்களது திருமணம் நிறைவடைந்துள்ள நிலையில், இணையத்தில் இவர்கள் பகிர்ந்த புகைப்படங்கள் வைரலாகி உலகெங்கிலும் உள்ள ரசிகர்களின் வாழ்த்துகளைப் பெற்று வருகின்றன.
