CINEMA
இவங்களுக்கு மட்டும் வயசே ஆகாதா..? இன்னும் இளமையாவே இருக்காங்களே… நடிகை பூமிகாவின் லேட்டஸ்ட் போட்டவைப் பார்த்துகண்ணு வைக்கும் ரசிகர்கள்..!
நடிகை பூமிகா சாவ்லா தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மூலம் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார். ‘ரன்’, ‘சில்லுனு ஒரு காதல்’ போன்ற படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் பூமிகா. தற்போது அவருக்கு 47 வயது ஆகும் நிலையில், சமூக வலைதளங்களில் அவர் பகிர்ந்துள்ள புதிய புகைப்படங்கள், அவரை இன்னும் 20 வயது இளமையாகக் காட்டுகின்றன.
இந்த புகைப்படங்களில் பூமிகா மிகவும் ஸ்டைலாகவும், இளமையாகவும் காட்சியளிக்கிறார். இதைப் பார்த்த ரசிகர்கள், “காலம் இவரை மட்டும் அப்படியே விட்டுவிட்டதா?” என்றும், “இப்போதும் 28 வயது பெண் போலவே இருக்கிறார்” என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர். சினிமாவில் நீண்ட இடைவேளைக்குப் பிறகும் தனது உடல்வாகையும், அழகையும் அவர் அப்படியே பராமரித்து வருவது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது பூமிகா குணச்சித்திர வேடங்களில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் சாரா அர்ஜுனுடன் இணைந்து நடித்த ‘Euphoria’ திரைப்படம் அவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது. நடிப்பைத் தாண்டி, யோகா மற்றும் ஆரோக்கியமான உணவு முறைகளைத் தொடர்ந்து பின்பற்றி வருவதே அவரது இந்த இளமையின் ரகசியம் என கூறப்படுகிறது.
