“அடடே… விஜய்யுடன் மீண்டும் சேரும் சங்கீதா…! திடீர் மனமாற்றத்துக்கு இதுதான் காரணமா..!!” – cinefeeds
Connect with us

CINEMA

“அடடே… விஜய்யுடன் மீண்டும் சேரும் சங்கீதா…! திடீர் மனமாற்றத்துக்கு இதுதான் காரணமா..!!”

Published

on

முதலமைச்சர் விஜய்யிடம் இருந்து விவாகரத்து பெற வேண்டும் என அவரது மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், சமீபத்தில் அந்த மனுவை அவர் வாபஸ் பெற்றிருப்பது பல்வேறு கேள்விகளையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 1992ஆம் ஆண்டு ‘நாளைய தீர்ப்பு’ திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான விஜய், தனது தீவிர ரசிகையான சங்கீதாவையே திருமணம் செய்து கொண்டார். ஆனால் எதிர்பாராத விதமாக சங்கீதா, விஜய்யிடம் இருந்து பிரிந்து செல்ல விரும்புவதாகக் கூறி விவாகரத்து மனு தாக்கல் செய்தார். விஜய்க்கு ஒரு நடிகையுடன் தொடர்பு இருப்பதாக அவர் குற்றம்சாட்டியதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த வழக்கு இதுவரை மூன்று முறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், மூன்றாவது விசாரணையின்போது நீதிபதி சுஜாதா, சங்கீதாவிடம் சுமார் 20 நிமிடங்கள் தனியாக பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, தான் தொடர்ந்த விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்வதாக சங்கீதா நீதிமன்றத்தில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தார்.

இந்த திடீர் மனமாற்றத்துக்கு பின்னணியில் சில முக்கிய காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. சங்கீதாவுடனான திருமண உறவு முறிவதை விஜய் ஆரம்பம் முதலே விரும்பவில்லை என்றும், குடும்பம் மீண்டும் ஒன்றாக வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. அதேபோல், அவர்களது மகன் ஜேசன் சஞ்சய் மற்றும் மகள் திவ்யா ஆகிய இருவரும் பெற்றோர் பிரிவதை விரும்பவில்லை எனவும், அவர்கள் தொடர்ந்து பேசி பெற்றோருக்குள் ஏற்பட்டிருந்த மனக்கசப்பை போக்க முயன்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், சங்கீதாவின் மனக்கசப்புக்கு சில தவறான நபர்களின் ஆலோசனைகளும் காரணமாக இருந்ததாகவும், அவர்களின் தேவையற்ற பேச்சுகளால் விஜய் மீது அவருக்கு தவறான புரிதல் ஏற்பட்டதாகவும், குடும்பத்தினரின் அறிவுறுத்தலை ஏற்று அந்த நபர்களுடனான தொடர்பை சங்கீதா முற்றிலுமாக துண்டித்ததாகவும் கூறப்படுகிறது.

Advertisement

அதுமட்டுமின்றி, மன அழுத்தத்தில் இருந்த காலகட்டத்தில் சங்கீதா, தங்களது திருமண வீடியோக்கள், சீமந்த புகைப்படங்கள் மற்றும் குழந்தைகளுடன் விஜய் மகிழ்ச்சியாக செலவிட்ட பழைய தருணங்களின் புகைப்படங்களை பார்த்ததாகவும், அந்த நினைவுகள் அவருக்குள் மிகப்பெரிய மனமாற்றத்தை ஏற்படுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இறுதியில், பிள்ளைகளின் எதிர்காலம் மற்றும் அவர்களது மனநிலையை கருத்தில் கொண்டு சங்கீதா தனது முடிவை மாற்றிக்கொண்டதாக கூறப்படுகிறது. விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடிய நிலையில், குறுகிய காலத்திலேயே தனது முடிவை மாற்றிக்கொண்டு சங்கீதா அந்த மனுவை வாபஸ் பெற்றிருப்பது, விஜய் – சங்கீதா தம்பதியினர் மீண்டும் இணைந்திருக்கிறார்களா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், ரசிகர்கள் மத்தியிலும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in