CINEMA
இன்ஸ்டா போஸ்ட்டால் வசமாக சிக்கிய விக்ரம்… ஒரே ஒரு வீடியோவால்… அம்பலமான சர்வதேச குரங்கு கடத்தல் பின்னணி..!!
நடிகர் விக்ரம் குரங்குடன் விளையாடிய வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டதால் தற்போது பெரிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவர் விளையாடிய குரங்கு இந்தோனேசியாவைச் சேர்ந்த ‘லார் கிப்பன்’ வகை அரிய உயிரினம் என்பதும், அதை வீட்டில் வளர்ப்பது சட்டவிரோதம் என்பதும் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வகை குரங்கு மணிப்பூர் மாநிலத்தின் வழியே கடத்தி வரப்பட்டு, விக்ரமின் சம்பந்தியும் கெவின்கேர் நிறுவனத் தலைவருமான சி.கே. ரங்கநாதனின் வீட்டுக்குக் கொண்டு வரப்பட்டதாகக் கூறப்படுகிறது. விக்ரம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த வீடியோவின் மூலமாகவே இந்த கடத்தல் விஷயம் வெளிச்சத்திற்கு வந்து அம்பலமாகியுள்ளது. இதையடுத்து, வனத்துறை அதிகாரிகள் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
