CINEMA
எங்க கண்ணுல பட்டா சும்மா விட்ருவோமா…? நடிகர் விக்ரமின் பேத்தியா இது…? வைரலாகும் போட்டோ…!!

விக்ரம் நடிப்பில் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவான திரைப்படம் தங்கலான். பார்வதி, பசுபதி , மாளவிகா மேனன் என பலரும் நடித்த இந்த படம் வசூலில் மாஸ் காட்டியுள்ளது. இதனால் சந்தோஷத்தில் இருக்கும் தங்கலான் பட குழுவினர் பத்திரிக்கையாளர்களை சந்தித்து நன்றி தெரிவித்து வருகிறார்கள். அப்போது ஒரு நிகழ்ச்சியில் விக்ரம் பா.ரஞ்சித்துடன் புகைப்படம் எடுக்கும் போது அவருடைய ஃபோனில் ஒரு கியூட்டான வால்பேப்பர் ரசிகர்களுடைய கண்களில் தென்பட்டது.
அதாவது அவர் தன்னுடைய பேத்தியின் அழகிய கைகளை வால்பேப்பராக வைத்துள்ளார். நடிகர் விக்ரமின் மகள் ஹர்ஷிதாவிற்கு மனோரஞ்சித் என்பவரோடு கடந்து 2017 ஆம் வருடம் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது.