CINEMA
ஆம்ஸ்ட்ராங் கொலையில் நெல்சன் மனைவிக்கு தொடர்பில்லை…. போலீஸ் தரப்பு விளக்கம்…!!
பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் சமீபத்தில் பயங்கரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இவருடைய கொலையில் ஒரு குற்றவாளி என்கவுண்டர் செய்யப்பட்ட நிலையில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த கொலையில் சினிமா டைரக்டர் நெல்சனின் மனைவி மோனிஷாவுக்கு தொடர்பிருப்பதாகவும், அவரிடம் விசாரணை நடப்பதாகவும் நேற்று செய்தி வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.
தற்போது இதுகுறித்து போலீஸ் தரப்பு கூறுகையில், நெல்சன் மனைவியிடம் விசாரணை நடத்தி 10 நாள்களுக்கும் மேலாகி விட்டதாகவும், கொலையில் அவருக்கு சம்பந்தமில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.