மொட்டை கிருஷ்ணனுக்கு பணம் கொடுக்கவில்லை…. எச்சரிக்கை விடுத்த நெல்சனின் மனைவி…!! - cinefeeds
Connect with us

CINEMA

மொட்டை கிருஷ்ணனுக்கு பணம் கொடுக்கவில்லை…. எச்சரிக்கை விடுத்த நெல்சனின் மனைவி…!!

Published

on

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய வழக்கறிஞர் கிருஷ்ணனுடன் பலமுறை நெல்சனின் மனைவி பேசியதாக கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் நெல்சனின் மனைவியிடம் போலீசார் நடத்தி விசாரணை நடத்தினர். அதில் கிருஷ்ணன் தன்னுடைய பள்ளி நண்பன் என்றும் அவனிடம் வேறு ஒரு விஷயமாக பேசியதாகவும் கூறியுள்ளார். மேலும் தாங்கள் நண்பர்களோடு சேர்ந்து எடுத்துக் கொண்ட குழு புகைப்படம் ஒன்றையும் போலீஸிடம் காட்டியுள்ளார் நெல்சனின் மனைவி.

இதனை அடுத்து போலீசார் இந்த வவிசாரணை குறித்து எப்போது வேண்டுமானாலும் கூப்பிடுவோம். உடனே வர வேண்டும் எனவும் வெளியூர்களுக்கு செல்லக்கூடாது என்றும் அனுப்பி வைத்ததாக கூறப்பட்ட நிலையில் மோனிஷாவின் கணக்கிலிருந்து மொட்டை கிருஷ்னனுக்கு பணம் டிரான்ஸ்பர் செய்யப்பட்டிருப்பதாக நேற்று தகவல் வெளியானது.

Advertisement

இந்நிலையில்  மொட்டை கிருஷ்ணனுக்கு தான் பணம் தரவில்லை  மோனிஷா தெரிவித்துள்ளார். இது சம்பந்தமாக கடந்த 7ஆம் தேதி போலீசார் விசாரணை நடத்தியதாகவும், அதில் தன்னுடைய தரப்பு விளக்கத்தை கூறியதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார். மேலும் மொட்டை கிருஷ்ணனுடன் தன்னை தொடர்புபடுத்தி செய்தி வெளியிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.

Advertisement