CINEMA
மொட்டை கிருஷ்ணனிடம் பேசியது எதற்காக…? இதுதான் நடந்தது… போலீசில் நெல்சனின் மனைவி சொன்ன விஷயம்….!!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய வழக்கறிஞர் கிருஷ்ணனுடன் பலமுறை நெல்சனின் மனைவி பேசியதாக கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் நெல்சனின் மனைவியிடம் போலீசார் நடத்தி விசாரணை நடத்தினர். அதில் கிருஷ்ணன் தன்னுடைய பள்ளி நண்பன் என்றும் அவனிடம் வேறு ஒரு விஷயமாக பேசியதாகவும் கூறியுள்ளார். மேலும் தாங்கள் நண்பர்களோடு சேர்ந்து எடுத்துக் கொண்ட குழு புகைப்படம் ஒன்றையும் போலீஸிடம் காட்டியுள்ளார் நெல்சனின் மனைவி.
இதனை அடுத்து போலீசார் இந்த வவிசாரணை குறித்து எப்போது வேண்டுமானாலும் கூப்பிடுவோம். உடனே வர வேண்டும் எனவும் வெளியூர்களுக்கு செல்லக்கூடாது என்றும் அனுப்பி வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.