சின்ன வயசுல இருந்தே தெரியும்…. 11th படிக்கும் போது அந்த விஷயம் நடந்தது…. காதல் அனுபவத்தை பகிர்ந்த சிம்ரன்….!! - cinefeeds
Connect with us

CINEMA

சின்ன வயசுல இருந்தே தெரியும்…. 11th படிக்கும் போது அந்த விஷயம் நடந்தது…. காதல் அனுபவத்தை பகிர்ந்த சிம்ரன்….!!

Published

on

தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக ஒரு காலகட்டத்தில் வலம் வந்தவர் சிம்ரன். இவர் படங்களில் பிசியாக நடித்து கொண்டிருந்தபோது திருமணம் செய்துகொண்டு செட்டிலாகி விட்டார். பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். பேட்ட படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்தார். அதனை தொடர்ந்து விக்கிரமிற்கு ஜோடியாக மகான் என்ற படத்தில் நடித்தார். தற்போது பிரசாந்துடன் இணைந்து அந்தகன் படத்தில் நடித்துள்ளார்.

தற்போது மீண்டும் நாயகியாக அவதாரம் எடுத்து வரும் எடுத்து கலக்கி வரும் சிம்ரன் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.  இந்த நிலையில் நடிகை சிம்ரன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், தன்னுடைய கணவர் சிறுவயதிலேயே இருந்தே தனக்கு பழக்கமானவர். இருவரும் நண்பர்கள். அவர் என்னுடைய சித்தியின் உறவு கார பையன். 11 ஆம் வகுப்பு படிக்கும் பொழுது அவர் தான் வந்து என்னிடம் முதன்முதலாக ப்ரபோஸ் செய்தார் என்று கூறியுள்ளார்.

Advertisement

சிம்ரன் தன்னுடைய பால்ய நண்பனான தீபக் பாகாவுடன் கடந்த 2003 ஆம் வருடம் திருமணம் செய்து கொண்டார். தீபக் பாகா 2018 ஆம் வருடம் வெளியான ஓடு ராஜா ஓடு என்ற படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு நடிப்பில் கவனம் செலுத்தவில்லை. இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement