CINEMA
“செம்ம கியூட்..!” திருமணத்திற்கு பிறகும் குறையாத காதல்..! கணவருடன் ரொமான்ஸில் அசத்தும் ஆல்யா மானசா.. லைக்குகளை குவிக்கும் வீடியோ அந்த வீடியோ…!
விஜய் டிவியின் ‘ராஜா ராணி’ சீரியல் மூலம் ரீல் ஜோடியாக அறிமுகமாகி, பின் ரியல் ஜோடியாக மாறியவர்கள் ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் கார்த்திக். இவர்களுக்கு ஐலா என்ற மகளும், அர்ஷ் என்ற மகனும் உள்ளனர். சமூக வலைத்தளங்களில் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் இந்த ஜோடி, அவ்வப்போது தங்களது குடும்ப புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பகிர்ந்து ரசிகர்களைக் கவர்ந்து வருகின்றனர்.
தற்போது ஆல்யா மானசா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவர் சஞ்சீவ் உடன் இணைந்து எடுத்த புதிய ரொமான்டிக் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். பின்னணியில் மெல்லிசை ஒலிக்க, இருவரும் ஒருவருக்கொருவர் அன்பைப் பரிமாறிக்கொள்ளும் இந்த வீடியோ, பதிவேற்றிய சில நிமிடங்களிலேயே இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.
இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், “எப்பவுமே நீங்க கியூட் ஜோடிதான்” என்றும், “இப்படியே எப்போதும் சந்தோஷமாக இருங்கள்” என்றும் வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர். திருமணத்திற்குப் பிறகும் மாறாத இவர்களது காதல் மற்ற தம்பதிகளுக்கு முன்னுதாரணமாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram
