CINEMA
தூக்கமில்லாமல் தவிக்கும் குந்தவை..! தூக்கம் குறித்து த்ரிஷா பதிவிட்ட கலகலப்பான ஸ்டோரியை ரசிக்கும் ரசிகர்கள்.. இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்…!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான த்ரிஷா, சமூக வலைதளங்களில் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்குபவர். சமீபகாலமாக இவரைப் பற்றிப் பல்வேறு வதந்திகளும் சர்ச்சைகளும் எழுந்து வரும் நிலையில், தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ள ஒரு நகைச்சுவையான பதிவு ரசிகர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தூக்கம் மற்றும் உடல்நலம் சார்ந்த ஒரு சுவாரஸ்யமான கணக்கை அவர் அதில் பகிர்ந்துள்ளார்.
அந்தப் பதிவில், “நாம் ஒரு மணிநேரத் தூக்கத்தை இழந்தால், அதனை ஈடுகட்ட உடல் ரீதியாக சுமார் 4 நாட்கள் ஆகுமாம். அந்த கணக்கின்படி பார்த்தால், நான் இழந்த தூக்கத்தை எல்லாம் ஈடு செய்து மீண்டும் புத்துணர்ச்சியாக உணர 2062-ம் ஆண்டு ஆகிவிடும்” என வேடிக்கையாகக் குறிப்பிட்டுள்ளார். த்ரிஷாவின் இந்த ‘தூக்கக் கணக்கு’ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த பதிவைப் பார்த்த ரசிகர்கள், த்ரிஷா தொடர்ந்து படப்பிடிப்புகளில் பிஸியாக இருப்பதால் தூக்கமின்றி தவிக்கிறாரா அல்லது ஏதேனும் மன அழுத்தத்தில் இருக்கிறாரா என அக்கறையுடன் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேசமயம், த்ரிஷா எதைச் செய்தாலும் அது பேசுபொருளாகும் நிலையில், அவரது இந்த நகைச்சுவையான புலம்பலையும் ரசிகர்கள் ரசித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
