LATEST NEWS
இப்போ இதுதான் ஹாட் டாபிக்…! திருச்சி கிழக்கில் திரிஷாவை களமிறக்க முயற்சி… அந்த பதவி வேறயாம்… தவெக போடும் திட்டம்…!!!
தமிழக வெற்றிக் கழகம் கட்சி, திருச்சி கிழக்குத் தொகுதியில் நடிகை த்ரிஷாவை வேட்பாளராகக் களமிறக்கப் பரிசீலித்து வருவதாகப் பிரபல இதழ் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது. அத்தொகுதியில் தவெக-வின் வெற்றி உறுதி என அக்கட்சித் தலைமை கணித்துள்ளதால், தற்போது ‘ஹாட் டாபிக்காக’ இருக்கும் த்ரிஷாவை அங்கே போட்டியிட வைக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், நடிகை த்ரிஷாவுக்குக் கட்சியின் ‘கொள்கை பரப்பு செயலாளர்’ பதவி தரப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இத்தகைய காரணங்களினாலேயே, திருச்சி கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் நடிகர் லாரன்ஸ் போட்டியிடவில்லை என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன.
