Suriya-வின் அசுர வேட்டை…!6 நாளில் இத்தனை கோடியா…! ஆர்ஜே பாலாஜியின் தரமான இயக்கம்…!பாக்ஸ் ஆபீஸை துவம்சம் செய்யும் சூர்யாவின் ‘கருப்பு’! மிரளும் திரையுலகம்…! – cinefeeds
Connect with us

CINEMA

Suriya-வின் அசுர வேட்டை…!6 நாளில் இத்தனை கோடியா…! ஆர்ஜே பாலாஜியின் தரமான இயக்கம்…!பாக்ஸ் ஆபீஸை துவம்சம் செய்யும் சூர்யாவின் ‘கருப்பு’! மிரளும் திரையுலகம்…!

Published

on

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா, த்ரிஷா, இந்திரன்ஸ், நடராஜ் மற்றும் ஆர்ஜே பாலாஜி உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியாகியுள்ள ‘கருப்பு’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படத்தின் மூலம் நடிகராக மட்டுமன்றி கதை, திரைக்கதை எழுதி இயக்குநராகவும் ஆர்ஜே பாலாஜி தனது அசாத்திய திறமையை நிரூபித்துள்ளார். பல ஆண்டுகள் காத்திருப்பு மற்றும் தொடர் சறுக்கல்களுக்குப் பிறகு, சூர்யாவின் திரைப்பயணத்தில் ஒரு மிகப்பெரிய தியேட்டரிக்கல் வெற்றியாக இப்படம் அமைந்துள்ளது. சூர்யாவின் முந்தைய படமான ‘ரெட்ரோ’ தோல்வியைத் தவிர்த்ததே தவிர, பெரிய வெற்றியைப் பெறவில்லை. ஆனால், தன் மீது ரசிகர்கள் வைத்திருந்த அசைக்க முடியாத நம்பிக்கையை ‘கருப்பு’ படத்தின் மூலம் சூர்யா மீண்டும் மீட்டெடுத்துள்ளார்.

இப்படத்தில் சூர்யா ஒட்டுமொத்தமாகச் சுமார் 15 காட்சிகளில் மட்டுமே தோன்றினாலும், கிளைமாக்ஸ் காட்சியில் அவர் ‘கருப்பனாக’ ஆடும் ஆட்டம் திரையரங்குகளை அதிர வைத்துள்ளது. சாய் அபயங்கரின் வெறித்தனமான பின்னணி இசை, படம் பார்க்க வந்த ரசிகர்களைத் தியேட்டரிலேயே அருள் வந்து ஆட வைக்கும் அளவிற்கு மிரட்டலாக அமைந்துள்ளது. இதனால் சூர்யாவின் அன்பான ரசிகர்களுக்கு இப்படம் ஒரு செம்ம மாஸ் திரைவிருந்தாக மாறியுள்ளது.’கருப்பு’ திரைப்படம் வெளியான முதல் 3 நாட்களில் உலகளவில் ரூ.147 கோடிகளை வசூலித்ததாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

Advertisement

இந்நிலையில், கடந்த மே 15-ஆம் தேதி வெளியான இப்படம் முதல் 6 நாட்களில் உலகளவில் மொத்தம் ரூ.175 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளதாக ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவில் மட்டுமே எப்படியும் ரூ.100 கோடிக்கு மேல் வசூலாகி இருக்கும் என்று கூறப்படுகிறது. வரும் வார இறுதியிலும் (Weekend) படத்தின் வசூல் பல மடங்கு அதிகரிக்கும் என்பதால் படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in