CINEMA
சென்னையில எனக்கு தெரிஞ்ச ஒரே இடம் அதுதான்…த்ரிஷா முகத்தை மூடிக்கொண்டு வெட்கப்பட இதுதான் காரணமா?… ராணா டகுபதி மேடையில் ஓப்பனாக சொன்ன சீக்ரெட்…த்ரிஷாவின் லேட்டஸ்ட் வைரல் பின்னணி…!
சினிமாவில் இரு தசாப்தங்களுக்கும் மேலாக முன்னணி நடிகையாக வலம் வரும் த்ரிஷா, சமீபகாலமாக தனது படங்களை விடவும் தனிப்பட்ட நட்பு வட்டாரங்கள் குறித்த செய்திகளால் சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறார். குறிப்பாக, தமிழக முதலமைச்சர் விஜய்யின் பிறந்தநாளுக்கு அவர் பகிர்ந்த புகைப்படம் ஏற்படுத்திய தாக்கம் இன்னும் குறையாத நிலையில், தற்போது த்ரிஷா குறித்த பழைய வீடியோ ஒன்று மீண்டும் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் உள்ள பல முன்னணி நட்சத்திரங்களுடன் நெருங்கிய நட்பு பாராட்டி வரும் த்ரிஷாவுக்கும், பிரபல தெலுங்கு நடிகர் ராணா டகுபதிக்கும் இடையே பல ஆண்டுகாலமாக நீடிக்கும் ஆழமான நட்பு ஒட்டுமொத்த திரையுலகமும் அறிந்ததுதான்.
அந்த வகையில், சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற ஒரு திரைப்பட விழாவில் நடிகர் ராணா டகுபதி த்ரிஷா குறித்து கலகலப்பாகப் பேசிய வீடியோ ஒன்று இப்போது மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த மேடையில் பேசிய ராணா, “சென்னையில் என்னை எங்கு கொண்டு போய் விட்டாலும், நான் த்ரிஷா வீட்டுக்குத்தான் செல்வேன்; ஏனென்றால் சென்னையில் எனக்கு சரியாக தெரிந்த ஒரே இடம் த்ரிஷாவின் வீடு மட்டும்தான்” என்று வெளிப்படையாகக் கூறினார். ராணா இப்படிப் பேசியதும் அரங்கமே சிரிப்பொலியால் அதிர்ந்ததுடன், முன்வரிசையில் அமர்ந்திருந்த த்ரிஷாவும் வெட்கத்துடன் சிரித்தபடி முகத்தை மூடிக்கொண்டார். இவர்களின் இந்த அழகான, க்யூட்டான தருணம்தான் தற்போது ரசிகர்களால் மீண்டும் ட்ரெண்டாக்கப்பட்டு வருகிறது.
இந்த பழைய வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வரும் ரசிகர்கள், “இவ்வளவு ஓப்பனாக யாராவது பேசுவார்களா?”, “ராணா சொல்லும்போது த்ரிஷாவின் ரியாக்ஷனே தனி அழகுதான்”, “இந்த நட்புக்குள் ஏதோ ஒரு ஸ்பெஷல் பாண்டிங் இருக்கிறது” என்றெல்லாம் சுவாரஸ்யமாக கமெண்ட் செய்து வருகின்றனர். ஒருபுறம் இத்தகைய வதந்திகளும், பழைய நினைவுகளும் இணையத்தை ஆக்கிரமித்தாலும், மறுபுறம் த்ரிஷா தொடர்ந்து பல பிரம்மாண்ட முன்னணித் திரைப்படங்களில் ஒப்பந்தமாகி பிஸியாக நடித்து வருகிறார். இருபது ஆண்டுகளைக் கடந்தும் தமிழ் சினிமாவின் ‘எவர்கிரீன்’ குயினாக த்ரிஷா தனது இடத்தை தக்கவைத்திருப்பது அவரது ரசிகர்களுக்கு பெரும் வியப்பையும் பாராட்டையும் தந்துவருகிறது.
