“பகீர்.. ! காட்டுக்குள் எறிந்த பெண்சடலம்..!” 3 நாட்களாக தப்பி ஓடிய காதலன்…காதலியை கொன்று தந்தையுடன் சேர்ந்து செய்த கொடூர காரியம்.. குலைநடுங்க வைக்கும் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CINEMA

“பகீர்.. ! காட்டுக்குள் எறிந்த பெண்சடலம்..!” 3 நாட்களாக தப்பி ஓடிய காதலன்…காதலியை கொன்று தந்தையுடன் சேர்ந்து செய்த கொடூர காரியம்.. குலைநடுங்க வைக்கும் சம்பவம்..!!

Published

on

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சென்றாம்பாளையம் பிரிவில் உள்ள ஒரு காலி இடத்தில், கடந்த ஜூலை 31 அன்று பெண் ஒருவர் உடல் முழுவதும் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாகக் கிணத்துக்கடவு காவல்துறையினர் முதற்கட்டமாகச் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். கொலையாளிகளைக் கண்டறியக் கோவை மாவட்டக் காவல்துறை சார்பில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

தனிப்படை போலீசார் சம்பவ இடத்தைச் சுற்றியிருந்த 120-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளைத் தீவிரமாக ஆய்வு செய்தனர். அதில், ஜூலை 27 அன்று பொள்ளாச்சியைச் சேர்ந்த பழனிமுத்து என்பவர் அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சந்தேகத்திற்கு இடமான வகையில் சென்று வந்தது கண்டறியப்பட்டது. அவரைப் பிடித்து நடத்திய விசாரணையில், எரிக்கப்பட்ட பெண் ஜமீன் கோட்டாம்பட்டியைச் சேர்ந்த சங்கீதா என்பதும், இருவருக்கும் கடந்த 3 ஆண்டுகளாகத் தொடர்பு இருந்ததும் தெரியவந்தது. சங்கீதாவிற்கு வேறொரு நபருடன் தொடர்பு இருப்பதாக ஏற்பட்ட சந்தேகத்தால், ஜூலை 27 இரவு வாடகை வீட்டில் வைத்து அவரைப் பழனிமுத்து கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார்.

Advertisement

கொலையை மறைப்பதற்காகத் தனது தந்தை குருநாதன் என்பவரின் உதவியுடன் சங்கீதாவின் உடலைப் போர்வையில் சுற்றி, இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்று காட்டுப்பகுதியில் பெட்ரோல் ஊற்றி எரித்தது அம்பலமானது. இதையடுத்துச் சந்தேக மரண வழக்கைக் கொலை வழக்காக மாற்றிய காவல்துறையினர், பழனிமுத்து மற்றும் அவரது தந்தை குருநாதன் ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர். 120 சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து குற்றவாளிகளை விரைவாகப் பிடித்த காவல்துறையினரின் இந்த நடவடிக்கை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in