LATEST NEWS
1 பெண்+2 ஆண் அமைச்சர்களுக்கு ரெட் கார்டு… முதல்வர் விஜய்யின் அதிரடி லிஸ்ட்டில் அந்த 3 பேர் யார்..? பரபரக்கும் தமிழக அரசியல்..!!
தமிழக அமைச்சரவையில் விரைவில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வரும் பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடைந்தவுடன் இந்த அமைச்சரவை மற்றும் இலாகா மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
புதிய அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து முதல்வர் விஜய் அதிருப்தியில் இருப்பதே இந்த நடவடிக்கைக்கு முதன்மை காரணமாகக் கூறப்படுகிறது. இதன்படி, தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த 3 முதல் 4 அமைச்சர்கள் மற்றும் அவர்களது துறைகள் மாற்றப்படக்கூடும் என்றும், இந்த மாற்றம் பெறவுள்ளவர்களின் பட்டியலில் ஒரு பெண் அமைச்சர் மற்றும் இரண்டு ஆண் அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
அதேவேளையில், கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களை மாற்ற வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், தமிழக வெற்றிக் கழக அமைச்சர் பார்த்திபன் அவர்களின் துறையிலும் எந்தவித மாற்றமும் செய்யப்பட மாட்டாது என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
