பகீர்.. “ரூம்ல அடைச்சு வச்சு சித்ரவதை..!” கணவன் மீது பிரபல சீரியல் நடிகை கொடுத்த அதிரடி எஃப்.ஐ.ஆர்.. மும்பை சின்னத்திரையில் பெரும் பரபரப்பு..!! – cinefeeds
Connect with us

CINEMA

பகீர்.. “ரூம்ல அடைச்சு வச்சு சித்ரவதை..!” கணவன் மீது பிரபல சீரியல் நடிகை கொடுத்த அதிரடி எஃப்.ஐ.ஆர்.. மும்பை சின்னத்திரையில் பெரும் பரபரப்பு..!!

Published

on

மும்பை கோரேகான் பகுதியில் வசித்து வரும் பிரபல ‘ரப் ஸே ஹை துவா’ சீரியல் நடிகை அதிதி சர்மா, தனது கணவர் அபினீத் வித்யானந்த் கௌஷிக் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கடுமையான குடும்ப வன்முறை புகார்களை அளித்துள்ளார். கடந்த 2021-ல் ஆன்லைன் நடிப்புப் பயிற்சி வகுப்பில் தொடங்கிய காதல், இருவீட்டார் சம்மதத்துடன் 2024 நவம்பரில் திருமணமாக முடிந்தது. ஆனால், திருமணம் முடிந்த சில நாட்களிலேயே கணவர் ஆடை அணியும் விவகாரத்தில் கட்டுப்பாடுகள் விதித்தும், வீட்டுச் செலவுகளுக்குப் பணம் தராமல் அதிதியிடமே பணம் பறித்தும் தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.

கடந்த 2025 புத்தாண்டு தினத்தன்று இருவருக்கும் இடையே ஏற்பட்ட சிறிய வாக்குவாதம் பெரிய சண்டையாக மாறிய நிலையில், அதிதியின் நடத்தை மீது கணவருக்குச் சந்தேகம் வலுத்துள்ளது. அதிதிக்கு வேறொருவருடன் தொடர்பு இருப்பதாகக் கூறி அவரது மொபைல் போனை பரிசோதித்ததுடன், பெற்றோர் மற்றும் குடும்பத்தினருடன் பேச விடாமல் அவரைத் தனி அறையில் அடைத்துத் தனிமைப்படுத்தியுள்ளார். இந்த மனரீதியான மற்றும் உடல்ரீதியான கொடுமைகளுக்குக் கணவரின் தாயார் ஊர்மிளா மற்றும் சகோதரி கீர்த்தியும் முழு உடந்தையாக இருந்துள்ளனர்.

Advertisement

மேலும், அதிதியின் வைர மோதிரம், தங்கச் சங்கிலி, வளையல்கள் மற்றும் மாங்கல்யம் உள்ளிட்ட ஒட்டுமொத்த ‘ஸ்திரீதன’ நகைகளையும் அவரது மாமியார் பறித்து வைத்துக்கொண்டு திருப்பித் தர மறுத்துள்ளார். பாதிக்கப்பட்ட அதிதி சர்மா கோரேகான் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், ஜூலை 31 அன்று கணவர், மாமியார் மற்றும் நாத்தனார் ஆகிய மூவர் மீதும் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு போலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். எனினும், இக்குற்றச்சாட்டுகள் குறித்து கணவர் தரப்பிலிருந்து இதுவரை எவ்வித விளக்கமும் அளிக்கப்படவில்லை.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in