நெஞ்சை நடுங்க வைக்கும் பயங்கரம்…! ஊர்வலத்தில் திடீரென சாய்ந்த பிரமாண்ட விநாயகர் சிலை… 2 பேர் பலி, சிறுமிகள் உட்பட 5 பேர் காயம்..! மும்பையை உலுக்கிய பகீர் விபத்து..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நெஞ்சை நடுங்க வைக்கும் பயங்கரம்…! ஊர்வலத்தில் திடீரென சாய்ந்த பிரமாண்ட விநாயகர் சிலை… 2 பேர் பலி, சிறுமிகள் உட்பட 5 பேர் காயம்..! மும்பையை உலுக்கிய பகீர் விபத்து..!!

Published

on

தெற்கு மும்பையின் புலேஷ்வர் பகுதியில் உள்ள ‘புலேஷ்வர்சா ராஜா’ கணபதி மண்டல் சார்பில், விநாயகர் சதுர்த்தி விழாவைக் கொண்டாடுவதற்காக 22 அடி உயரமும் சுமார் 3 டன் எடையும் கொண்ட பிரமாண்ட விநாயகர் சிலை தயார் செய்யப்பட்டுப் பந்தலுக்குக் கொண்டு வரப்பட்டது. சனிக்கிழமை இரவு சுமார் 9.51 மணியளவில், பலராம் மெர்ச்சண்ட் சாலையில் உள்ள கபுதர்கானா ஜெயின் அம்பே சௌக் அருகே சிலை ஊர்வலமாகச் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாகத் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஒருபுறமாகச் சரிந்து பக்தர்கள் மீது விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்தத் திடீர் விபத்தில் சிலையின் அடியில் சிக்கி படுகாயமடைந்தவர்களை மீட்டு உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். எனினும், கணபதி மண்டலின் தலைவரான சங்கேத் நெவ்சே மற்றும் பிரிஜேஷ் ஹேமந்த் ஜோஷி ஆகிய இருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.

Advertisement

மேலும், இந்த விபத்தில் 5 மற்றும் 7 வயதுடைய இரு சிறுமிகள் உட்பட 5 பேர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்த வைபவ் கேனந்த், பவன் சௌராசியா, சிறுமிகள் லாவண்யா, திவ்யா மற்றும் குணால் காஷித் ஆகியோர் ஜி.டி. மற்றும் ஜே.ஜே. மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in