“என்னை டி.ஆர்.பி-க்காக யூஸ் பண்ணிக்கிட்டாங்க..!” ஆரி மற்றும் மாயா மீது போட்டியாளர் பிரிய வர்ஷினி வைத்த நொருக்கும் குற்றச்சாட்டு..!!! – cinefeeds
Connect with us

CINEMA

“என்னை டி.ஆர்.பி-க்காக யூஸ் பண்ணிக்கிட்டாங்க..!” ஆரி மற்றும் மாயா மீது போட்டியாளர் பிரிய வர்ஷினி வைத்த நொருக்கும் குற்றச்சாட்டு..!!!

Published

on

கடந்த 16ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தி காமன்மேன்’ நிகழ்ச்சியில், பொதுமக்களையும் போட்டியாளர்களாகத் தேர்வு செய்வதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளிலேயே 50 போட்டியாளர்களை இரண்டு பேருந்துகளில் ஏற்றி, விசில் அடித்ததும் போட்டி போட்டு ஏறச் சொன்ன விதம் பார்வையாளர்கள் மத்தியில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. “சாதாரண மக்களை இப்படித்தான் நடத்துவதா?” என பலரும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பினர்.

இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்துகொண்ட பிரிய வர்ஷினி நைட்டி அணிந்து வந்ததும் பெரிய சர்ச்சையானது. ஷூட்டிங் என்பதால் வேறு உடைக்குமாறு நடுவர்கள் கூறியபோது, தான் நைட்டியில் வருவதற்கு ஏற்கனவே அனுமதி கேட்டிருந்ததாகவும், அதற்கு அவர்கள் சம்மதித்திருந்ததாகவும் பிரிய வர்ஷினி வாதிட்டார். மேலும், “நைட்டி அணிவது கொலைக் குற்றமா? என்னை டி.ஆர்.பி-க்காக பயன்படுத்திக் கொண்டுவிட்டனர்” எனவும், ஆரி மற்றும் மாயா பேசிய விதம் தனக்குப் பிடிக்கவில்லை எனவும் வெளிப்படையாகக் குற்றம்சாட்டினார். இந்தச் சர்ச்சையைத் தொடர்ந்து அவர் உடனடியாக நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

Advertisement

பிரிய வர்ஷினியின் பேச்சுக்குச் சமூக வலைதளங்களில் ஆதரவும் எதிர்ப்பும் மாறி மாறி எழுந்து வருகிறது. அவரை பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பியிருந்தால் நல்ல கன்டென்ட் கிடைத்திருக்கும் என்று ஒரு தரப்பினர் கருத்துத் தெரிவிக்கின்றனர். இதற்கிடையே, பிக் பாஸ் அல்டிமேட் டைட்டில் வென்ற பாலாஜி முருகதாஸ், “ஆடிஷனுக்காக கண்ணியத்தை விடுவதா? சுயமரியாதை முக்கியம்” என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த விவகாரம் தற்போது இணையத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறி சூடுபிடித்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in