LATEST NEWS
‘அவர்கள் செய்த தவறு இதுதான்’.. நீரிணையில் ஈரான் ஏவுகணை தாக்குதல்: இந்திய மாலுமி பரிதாப பலி.. உலக நாடுகளை அதிரவைத்த ஈரான் குற்றச்சாட்டு..!!
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை, ஓமன் கடல் எல்லைக்குட்பட்ட பகுதியில் பயணித்த ‘மொம்பாசா’ மற்றும் ‘அல் பாஹியா’ ஆகிய இரு ஐக்கிய அரபு அமீரக எண்ணெய் கப்பல்கள் மீது குரூஸ் ஏவுகணைகளை வீசி கொடூர தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் மொம்பாசா கப்பலில் பணியாற்றிய இந்திய மாலுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்; மேலும் 6 இந்தியர்கள் உட்பட 8 மாலுமிகள் காயமடைந்துள்ளனர். கப்பல்கள் தங்களது திசைகாட்டி அமைப்புகளை அணைத்துவிட்டு, எச்சரிக்கைகளை அலட்சியப்படுத்தி ஆபத்தான பாதையில் சென்றதே தாக்குதலுக்குக் காரணம் என்றும், இதற்கு அமெரிக்காவின் தூண்டுதலே பின்னணி என்றும் ஈரான் விளக்கமளித்துள்ளது.
இத்தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்துள்ள ஐக்கிய அரபு அமீரகம், இதற்குத் தகுந்த பதிலடி கொடுக்க தங்களுக்கு உரிமை உள்ளதாக எச்சரித்துள்ளது. இதற்கிடையே, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான் மீது கடல்சார் முற்றுகையை மீண்டும் அமல்படுத்துவதோடு, ஹார்முஸ் நீரிணையின் பாதுகாப்பை அமெரிக்காவே ஏற்கும் என்றும், அங்கு கடக்கும் கப்பல்களுக்கு 20% பாதுகாப்பு கட்டணம் விதிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். 2026 பிப்ரவரி முதல் நீடித்து வரும் இந்த சர்வதேச மோதல் போக்கு புதிய உச்சத்தை எட்டியுள்ளதால், மிக முக்கிய வர்த்தகப் பாதையான ஹார்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள பதற்றம் உலகளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டையும் விலை உயர்வையும் ஏற்படுத்தலாம் என அஞ்சப்படுகிறது.
