LATEST NEWS
BIG BREAKING: போர் ஒப்பந்தம் ரத்து.. அறிவித்த சில நிமிடங்களில் விலை உயர்வு…!!
ஈரான் உடனான போர் நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளதை அடுத்து, சர்வதேச அளவில் மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் ஒப்பந்தத்தை மீறி 3 கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளதாக டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். டிரம்பின் இந்த அதிரடி அறிவிப்பால் வளைகுடா நாடுகளில் பெரும் பதற்றம் உருவாகியுள்ளது.
இந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களிலேயே உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை 6% வரை அதிரடியாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 75 டாலராக மாறியுள்ளதுடன், உடனடியாக எரிபொருள் மற்றும் பிற பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
