“தாயா இவ…?” 5 ரூபாய்க்காக இப்படியா பண்ணுவாங்க…? 3 நாளா மகனை அறையில பூட்டி வச்சுச் சூடு வச்சக் கொடூரம்..! ஃபதேபூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“தாயா இவ…?” 5 ரூபாய்க்காக இப்படியா பண்ணுவாங்க…? 3 நாளா மகனை அறையில பூட்டி வச்சுச் சூடு வச்சக் கொடூரம்..! ஃபதேபூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் ஃபதேபூர் மாவட்டம், ராதாநகர் காவல் எல்லைக்கு உட்பட்ட புல்வாமவ் கிராமத்தில் அதிர்ச்சியளிக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அங்குள்ள ஒரு சிறுவன், ரூ.20-இல் ரூ.15-க்கு குட்கா வாங்கிவிட்டு மீதமுள்ள ரூ.5-ஐச் செலவழித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவனது தாய் கூடியா, சிறுவனை கடுமையாகத் தாக்கியதுடன், சூடான கத்தியால் அவனது இரண்டு உள்ளங்கால்களிலும் சூடு வைத்துள்ளார். அதுமட்டுமின்றி, அச்சிறுவனை மூன்று நாட்களாக ஒரு அறையில் பூட்டி அடைத்து வைத்துள்ளார்.

அறையிலிருந்து சிறுவனின் கதறல் சத்தத்தைக் கேட்ட அண்டை வீட்டார், சந்தேகமடைந்து தலையிட்டுச் சென்று பார்த்தபோது சிறுவனின் பரிதாப நிலையைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர்கள் சிறுவனை தாயின் பிடியிலிருந்து மீட்டு, காவல் துறைக்குத் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த ராதாநகர் பகுதி போலீசார், காயமடைந்த சிறுவனை மீட்டு மருத்துவப் பரிசோதனைக்காகவும் சிகிச்சைக்காகவும் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement

சிறுவனின் உடலில் காயங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, சிறுவனின் தந்தை வினய் சிங் அளித்த புகாரின் பேரில், தாய் கூடியா மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. தற்போது சிறுவன் மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்து வருகிறான். இச்சம்பவம் தொடர்பாக காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும், மருத்துவ அறிக்கை மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in