LATEST NEWS
“இதை மட்டும் நான் செய்யலன்னா… 19 வயசுல ரவுடியாகியிருப்பேன்…!” புத்தக விழாவில் அமைச்சர் ராஜ்மோகன் ஓபன் டாக்..!!
அமைச்சர் ராஜ்மோகன் அவர்கள் புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பேசுகையில், “மகிழ்ச்சி என்பது அனைவருக்கும் தேவையாக உள்ளது. அதை வேறு எங்கும் தேடாமல் உங்களிடமே தேடுங்கள்” என்று தெரிவித்துள்ளார். மேலும், இளம் வயதில் தான் படித்த ஒரு குறிப்பிட்ட புத்தகம் தான் தன் வாழ்க்கையையே மாற்றியதாகக் குறிப்பிட்ட அவர், அந்த புத்தகத்தை மட்டும் வாசிக்காமல் இருந்திருந்தால் 19 வயதிலேயே தான் ஒரு ரவுடியாக மாறியிருப்பேன் எனக் கூறியுள்ளார்.
புத்தக வாசிப்பு மட்டும் இல்லையென்றால் தன் பாதையே முற்றிலும் மாறியிருக்கும் என்று கூறிய அமைச்சர், மேடையில் இருந்தவர்களிடம் “உங்கள் வாழ்க்கையை மாற்றியது எது?” என்ற கேள்வியையும் முன்வைத்தார். புத்தகங்கள் ஒரு மனிதனின் வாழ்க்கைப் பாதையை நேர்வழிப்படுத்துவதில் எவ்வளவு முக்கியப் பங்கு வகிக்கின்றன என்பதைத் தனது சொந்த வாழ்க்கை அனுபவத்தின் மூலம் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
