திடீரென மாயமான தாய் மற்றும் குழந்தைகள்… மாற்று சமூகத்து இளைஞர் வீட்டில் மீட்பு… உத்தரப் பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

திடீரென மாயமான தாய் மற்றும் குழந்தைகள்… மாற்று சமூகத்து இளைஞர் வீட்டில் மீட்பு… உத்தரப் பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி மாவட்டம், சிரோலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அஞ்சனி கிராமத்தில் காணாமல்போன பெண் மற்றும் அவரது குழந்தைகள், அதே கிராமத்தைச் சேர்ந்த மாற்று சமூகத்தைச் சேர்ந்த இளைஞரின் வீட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். காவல் துறையினர் நடத்திய சோதனையின் போது, அந்தப் பெண் வீட்டின் ஒரு அறையில் இருந்த கட்டிலின் அடியில் ஒளிந்திருந்த நிலையில் கண்டறியப்பட்டார். அப்பெண்ணின் கணவர், அந்த இளைஞர் தனது மனைவியையும் குழந்தைகளையும் ஆசைவார்த்தை கூறி கடத்திச் சென்று, மதமாற்றம் செய்ய முயன்றதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

பாதிக்கப்பட்ட கணவர் சிரோலி காவல் நிலையத்தில் அளித்த புகாரில், கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி அதிகாலை சுமார் 4 மணியளவில் தனது மனைவி யாரிடமும் சொல்லாமல் திடீரென மாயமானதாகக் குறிப்பிட்டுள்ளார். பல இடங்களில் தேடியும் உறவினர்களிடம் விசாரித்தும் தகவல் கிடைக்காததால், அதே கிராமத்தைச் சேர்ந்த மாற்று சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் மீது குடும்பத்தினருக்குச் சந்தேகம் ஏற்பட்டது. அந்த இளைஞர்தான் தனது மனைவியையும் குழந்தைகளையும் கடத்திச் சென்று மதமாற்றம் செய்ய முயல்வதாகக் கணவர் காவல்துறையிடம் புகார் அளித்தார்.

Advertisement

புகாரின் பேரில் உடனடி நடவடிக்கை எடுத்த சிரோலி காவல் துறையினர், சந்தேகத்திற்குரிய இளைஞரின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது முதலில் குழந்தைகள் மீட்கப்பட்டனர்; தொடர்ந்து நடத்தப்பட்ட தீவிர சோதனையில் கட்டிலின் அடியில் ஒளிந்திருந்த பெண்ணும் பத்திரமாக மீட்கப்பட்டார். காவல்துறையினர் அந்த இளைஞரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பெண் அங்கு எப்படி வந்தார் மற்றும் மதமாற்றக் குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மை குறித்து அனைத்துக் கோணங்களிலும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகச் சிரோலி காவல் நிலைய அதிகாரி ரோஹித் குமார் தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in